நாடுகடத்தல் சட்டமூலத்தை வாபஸ் பெற்றது ஹொங்கொங்

Published By: Digital Desk 3

04 Sep, 2019 | 04:54 PM
image

சீனாவின் ஹொங்கொங் விசேட நிருவாகப் பிராந்தியத்தில் வன்முறை ஆர்ப்பாட்டங்களுக்கு காரணமான சர்ச்சைக்குரிய நாடுகடத்தல் சட்டமூலத்தை திரும்பப் பெறுவதாக ஹொங்கொங் தலைவர் கேரீ லாம் அந்நாட்டு ஊடகங்கள் மூலம் அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹொங்கொங்கில் குற்ற வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் வெடித்தன.

இந்த போராட்டங்கள் ஹொங்கொங்கை பெரும் சிக்கலுக்குள் உள்ளாக்கியதையடுத்து கைதிகள் பரிமாற்ற சட்டமூலம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

எனினும் சட்டமூலத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், கூடுதலான ஜனநாயக உரிமைகளை கோரியும் ஹொங்கொங்கில் போராட்டங்கள் தொடர்கின்றன.

ஜனநாயக ஆர்வலர்கள் முன்னெடுத்த இந்த போராட்டங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பல தரப்பினரும் கைகோர்த்ததால் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

ஜூன் மாதத்தில் இருந்து நடைபெற்று வரும் குறித்த போராட்டங்கள் தொடர்பாக இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சீனா தனது இராணுவத்தை பயன்படுத்தி ஹொங்கொங்  போராட்டத்தை ஒடுக்க முயற்சித்தது. இதற்காக ஹொங்கொங்  எல்லையில் சீனா இராணுவ தளவாடங்களை குவித்து வருகிறது.

இதற்கிடையில், ஹொங்கொங்கிற்கு சர்வதேச வாக்குரிமை மறுக்கப்பட்டதன் 5 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மாபெரும் பேரணி நடைபெற்றது.

தடையை மீறி இந்த பேரணி நடந்ததால், பொலிசார் போராட்டக்காரர்களை கலைக்க முற்பட்டனர். இதில் பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

ஹொங்கொங்கின் பல்வேறு நகரங்களிலும் பொலிசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக ஹொங்கொங்  பாராளுமன்றம் அமைந்துள்ள பகுதி கலவர பூமியாக மாறியது.  

இந்த நிலையில், ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிய  ஒப்படைப்பு சட்டமூலத்தை திரும்பப் பெறுவதாக ஹொங்கொங் தலைவர் கேரீ லாம் அறிவித்துள்ளதாக அங்குள்ள  ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17