மதுரையில் தனது ஆதரளவாளர்களுடன் நடந்த கூட்டத்தில், ’அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’ என மு.க. அழகிரி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை சத்ய சாய் நகரில் உள்ள தனக்கு சொந்தமான தயா மஹாலில் மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களை சந்தித்துள்ளார்.

மதுரை தெற்கு, மேற்கு, கிழக்கு, மத்திய தொகுதி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இருந்து அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பின்னர் கூட்டத்தில் எல்லோரையும் பார்த்து, நீங்கள் எல்லோரும் மறவாமல் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அப்போது ஒரு பெண்மணி, வழக்கமாக தி.மு.க. வுக்குத்தானே வாக்களிக்கச் சொல்வீர்கள்? என்று கேட்டுள்ளார்.அதற்கு பதிலளித்த அவர், நான் சொல்வதை செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.