அமெரிக்காவுக்கு காலக்கெடு விதித்தார் ஈரான் ஜனா­தி­பதி ரோஹானி 

Published By: R. Kalaichelvan

04 Sep, 2019 | 09:57 AM
image

அமெ­ரிக்­கா­வுடன் எந்­த­வொரு பரஸ்­பர பேச்­சு­வார்த்­தை­க­ளிலும் ஈடு­படப்போவ­தில்லை எனவும்  கொள்கை அடிப்­ப­டையில் இஸ்­லா­மிய குடி­ய­ரசு அத்­த­கைய பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு எதிர்ப்பைக் கொண்­டுள்­ளது எனவும்  ஈரா­னிய ஜனா­தி­பதி ஹஸன் ரோஹானி வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

 பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஆற்­றிய உரையின்போதே அவர் இவ்­வாறு வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

 தற்­போது அணு­சக்தி உடன்­ப­டிக்­கையில் தொடர்ந்­துள்ள ஏனைய நாடு­க­ளுடன்  இடம்­பெற்று வரும் பேச்­சு­வார்த்­தைகள் நாளை வியா­ழக்­கி­ழ­மைக்குள் எது­வித பெறு­பேற்­றையும் தரா­விட்டால்  முக்­கி­யத்­துவமிக்க 2015 ஆம் ஆண்டு அணு­சக்தி உடன்­ப­டிக்­கையின் கீழ்  அளிக்­கப்­பட்ட உறு­திப்­பா­டுகள் தொடர்பில் மேலும் குறைப்பை மேற்­கொள்ள  ஈரான் தயா­ரா­கி­யுள்­ள­தாக  அவர் தெரி­வித்தார்.

2015ஆம் அணு­சக்தி உடன்­ப­டிக்­கையில் அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா,  சீனா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய ஐக்­கிய நாடுகள் சபையில் அங்­கத்­துவம் வகிக்கும்  நாடு­க­ளுடன் ஜேர்­ம­னியும் கைச்­சாத்­திட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் அந்த அணு­சக்தி உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து தனது நாட்டை கடந்த  வருடம் மே மாதம்  ஒரு­த­லைப்­ப­ட்­ச­மாக வாபஸ் பெற்று ஈரா­னுக்கு எதி­ராக தடை­களை மீள விதித்­தது  முதற்­கொண்டு  இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான பதற்­ற­நிலை அதி­க­ரித்து வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

 அந்த இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான பதற்ற நிலையைத் தணி­விக்கும் முக­மாக  ரோஹா­னிக்கும் டொனால்ட் ட்ரம்­பிற்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்­றுக்கு ஏற்­பாடு செய்­வது தொடர்பில் பிரான்ஸ் ஜனா­தி­பதி இம்­மா­னுவேல் மக்ரோன் கடந்த ஆகஸ்ட் மாத இறு­தியில் இடம்­பெற்ற ஜி–7 உச்­சி­மா­நா­ட்டின் போது நம்­பிக்­கையை வெளியிட்­டி­ருந்தார்.

இந்­நி­லையில் ரோஹானி நேற்று பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­று­கையில், "இது தொடர்பில்  தவ­றான புரிந்­து­ணர்வு இருக்­கலாம். நாம் பல தட­வைகள் திரும்பத் திரும்ப கூறி வரு­வது என்­ன­வென்றால்  அமெ­ரிக்­கா­வுடன்  பரஸ்­பர பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான  திட்டம் எதுவும்  ஈரா­னுக்கு கிடை­யாது என்­ப­தே­யாகும்" என்று  தெரி­வித்தார். 

"ஆனால் அமெ­ரிக்கா  ஈரா­னுக்கு  எதி­ராக விதிக்­கப்­பட்ட தடைகள் அனைத்­தையும் நீக்­கு­மானால்  கடந்த காலங்­களில்  இடம்­பெற்­றதைப் போன்று அணு­சக்தி உடன்­ப­டிக்­கையில் அங்கம் வகிக்கும் நாடு­க­ளு­ட­னான சந்­திப்பின்போது பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வது சாத்­தி­ய­மாகும்"  என  அவர் கூறினார்.

"எதிர்­வரும் வியா­ழக்­கி­ழ­மைக்குள்  பேச்­சு­வார்த்­தை­களில்  உரிய பெறு­பே­றுகள் கிடைக்­கா­விட்டால் அணு­சக்தி உடன்­ப­டிக்­கையின் கீழான உறு­திப்­பா­டு­களைக் குறைத்துக்கொள்ளும் மூன்­றா­வது கட்ட நட­வ­டிக்கை  குறித்து நாம் அறி­விப்போம்" என அவர் தெரி­வித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52