குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் ஷாபிக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவில் ரத்ன தேரர் முறைப்பாடு

Published By: Vishnu

03 Sep, 2019 | 09:34 PM
image

(ஆர்.விதுஷா)

குழந்தையொன்று உயிரிழந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று மருத்துவ  நிபுணர் சேகு சியாப்தீன்  மொஹமட் ஷாபிக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரர் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளார்.

பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்த பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

கருத்தடை  விவகாரம்  தொடர்பில்  ஷாபிக்கு எதிராக 900 க்கும்   அதிகமான சிங்கள  தாய்மார் முறைப்பாடு செய்துள்ளனர். இருப்பினும் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில்  ஷாபி குற்றம் புரிந்தவர்  என்று தகவல்கள் எதுவும்  வெளியாகவில்லை என  குற்றப்பபுலனய்வு  பிரிவினர்  கூறியுள்ளதுடன், அவரை  குற்றமற்றவராக  சித்திரிக்கின்றனர்.  

இந்நிலையில் மாலினி என்ற தாயொருவர் சில வருடங்களுக்கு முன்னர்  தனது  குழந்தைக்கு நேர்ந்த அநியாயம்  தொடர்பில்  குற்றப்புலனாய்வுப்  பிரிவில்  முறையிட்டுள்ளார். ஆயினும்  அவ்விடயம் தொடர்பில்  எந்த  விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை.  

குழந்தை பிறந்தவுடன், நன்றாக பால் அருந்தியுள்ளது. பின்னர் குழந்தைக்கு  இதயநோய் உள்ளதாக  கூறப்பட்ட போதிலும்  சாதாரண  வார்ட்டிலேயே வைக்கப்பட்டுள்ளது.  பின்னர்  குழந்தை உயிரிழந்துள்ளது.  அந்த  குழந்தையின்  கால்களில் வெட்டுக்காயம் காணப்படுகின்றது. இது தொடர்பில் எவரும் கவனத்தில்  கொள்ளவில்லை. 

எனினும் இந்த விடயம்  தொடர்பில்  குற்றப்புலனாய்வு  பிரிவில்  முறைப்பாடு அளித்துளோம். பொலிசாரிடத்தில்  சென்றால் அவர்கள்  இந்த முறைப்பாட்டை  பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில்  தான்  நாம்  பொலிஸ்  ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளோம்.  

வைத்தியர் ஷாபியின் மீது மனித கொலை தொடர்பான  குற்றச்சாட்டையே நாம்  முன்வைத்துள்ளோம். ஆகவே இந்த  குழந்தையின் காலில் உள்ள  வெட்டுக்காயம் தொடர்பில்  விசாரணைகள் ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில்  குழந்தையின்  பிரேத பரிசோதனை அறிக்கையில்  இரண்டு விடயங்கள்  மரணத்திற்கான  காரணங்களாக  குறிப்பிடப்பட்டுள்ளன.  

அதில் எழுந்துள்ள சந்தேகத்தின் நிமித்தமே  இம் முறைப்பாட்டை   அளித்துள்ளளோம்.பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு  மீண்டும் குழந்தைப்பேறும் அற்றுப்போயுள்ளது.  

எனவே அவருடைய  குழந்தையின்  மரணம்  இயற்கை மரணமாக  இருக்க முடியாது என்ற  சந்தேகம் எழுந்துள்ளது.  ஆகவே தான்  முறைப்பாடு அளித்துள்ளோம். இது தொடர்பில்தகுந்த    விசாரணைகளை பொலிஸ் ஆணைக்குழு மேற்கொள்ளும்  என  நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33