நாட்டில் தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும், அவசர அனர்த்த நிலைமைகளை உடனடியாக அறியத்தருமாறும்  அவசர அனர்த்த நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரும் தயார் நிலையில் இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு மக்களிடம் கோரியுள்ளது. 

பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவின் மேலதிக பணிப்பாளர், பிரிகேடியர் கே.ஜெ.ஜெயவீரவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

அனர்த்தம் தொடர்பில் கீழ் கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்கலாம். 

இராணுவம் - 011 2 434 251 / 011 3 818 578 

கடற்படை - 011 2 445 368 / 011 2 212 230 / 011 2 212 231 

விமானப்படை - 011 2 343 970 / 011 2 343 971