91 வயது முதியவரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துக் கடத்திய வீட்டு வேலைக்காரன்

Published By: Digital Desk 4

03 Sep, 2019 | 12:52 PM
image

இந்தியாவின் தெற்கு டெல்லியில் 91 வயது முதியவரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கடத்திச் சென்ற குறித்த முதியவரின்  வீட்டு வேலைக்காரனை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்தியாவின் தெற்கு டெல்லியில்  வயதான தம்பதிகளான  கிருஷ்ணன் கோஷ்லா (வயது 91) மற்றும்அவரது மனைவி சரோஜா கோஷ்லா (87) வசித்து வந்த நிலையில் பீகாரைச் சேர்ந்த கிஷன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கிருஷ்ணனின் வீட்டில் பணியாற்றி வந்தார்.  கிருஷ்ணன் வேலை வாங்கிய விதத்தால் கிஷன் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பிற்பகலில் வீட்டு வேலைக்கு சென்ற கிஷன்  கிருஷ்ணனையும் அவரது மனைவியையும் 5 பேரின் உதவியோடு அடித்து சுயநினைவு இழக்கச் செய்ததாக சொல்லப்படுகிறது.

பின் பட்டா ரக வாகனம் ஒன்றில் குளிர் சாதனப் பெட்டியை எடுத்து அதனுள் கிருஷ்ணனை வைத்து கடத்திச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில்  சி.சி.டி.வி கெமராவில் சிக்கிய காட்சிகளில், குற்றம் சாட்டப்பட்டவர் கிருஷ்ணன் கோஷ்லாவின் வீட்டிற்கு வெளியே பட்டா ரக வாகனத்தில் குளிர்சாதன பெட்டியுடன் காணப்பட்ட நிலையில் காவலுக்கு நின்றவர்  கிஷனிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் குளிர்சாதன பெட்டியை பழுதுபார்ப்பதற்காக எடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடத்தப்பட்ட 91 வயதான கிருஷ்ணனையும், கடத்தியதாகக் கூறப்படும் கிஷனையும் பொலிஸார் தேடத் தொடங்கினர்.

இந்த நிலையில், குளிர்சாதன பெட்டியை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட பட்டா ரக வாகனம்  பிரதீப் ஷர்மா என்பவரின் வீட்டிற்கு வெளியயிலிருந்து மீட்கப்பட்டது.  குளிர்சாதன பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டு கிருஷ்ணன் மீட்கப்பட்டார்.

இதையடுத்து கிஷன் உட்பட தீபக் யாதவ், பிரதீப் சர்மா, சர்வேஷ் மற்றும் பிரபுதாயல் ஆகிய நான்கு பேர்  கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17