சுதந்திரக் கட்சியின் கடந்த கால தீர்மானங்கள் தவறானவை : இம்முறை தீர்க்கமானவையாக அமையும் என்கிறார் நிமல் சிறி­பால

Published By: Daya

03 Sep, 2019 | 10:34 AM
image

தற்­போது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தீர்­மா­மானங்கள் எதிர்­பார்ப்பு மிக்­க­வை­யாக இருக்­கின்­றன. ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து ஆட்­சி­ய­மைப்பது போன்று கடந்த காலங்­களில் நாம் எடுத்த தவ­றான தீர்­மா­னங்­களால் தான் அண்­மையில் பல சிக்­கல்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க நேர்ந்­தது. எனவே இனி எடுக்கும் தீர்­மா­னங்கள் அவ்­வா­றல்­லாமல் தீர்க்­க­மா­ன­வை­யாக  இருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் நிமல் சிறி­பால டி சில்வா தெரிவித்தார்.

சுதந்­திர கட்­சிக்கு ஆட்­சி­ய­மைக்கக் கூடிய அதி­காரம் இல்­லா­விட்­டாலும் ஆட்­சி­யா­ளரைத் தெரிவு செய்யக் கூடிய பலம் இருக்­கி­றது. அத்­தோடு ஜனா­தி­பதி தேர்தல் காலம் நெருங்கிக் கொண்­டி­ருக்­கின்­ற­மையால் எமது முடிவு எதிர்­பார்ப்­பா­ன­தா­கவும் மிகுந்த முக்­கி­யத்­து­வ­மு­டை­ய­தா­கவும் அமைந்­துள்­ளது. ஒரு­போதும் ஆட்­சியைக் கைப்­பற்ற முடி­யாது என்று தெரிந்தும் ஜே.வி.பி தனித்து போட்­டி­யிடத் தீர்­மா­னித்­தது. இந்­நி­லையில் நாமும் தீர்க்­க­மா­ன­தொரு முடிவை எடுக்கவேண்­டிய இடத்தில் இருக்­கின்றோம். 

எந்த சந்­தர்ப்­பத்­திலும் எல்­லோரும் நினைப்­பவை நடக்கும் என்று எதிர்­பார்க்க முடி­யாது. எனவே பொது­ஜன பெர­முன - சுதந்­திர கட்சி கூட்­டணி தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­களின் போது இரு தரப்பும் முறை­யான விட்டுக் கொடுப்­புடன் செயற்­பட வேண்டும். எனினும் அந்த விட்டுக் கொடுப்­புக்கள் சுதந்­திர கட்­சியின் தனித்­துவ தன்­மையை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது. 

நாம் இனி­யொரு போதும் ரணில், சஜித், கரு மாத்­திரம் அல்ல ஐக்­கிய தேசிய கட்­சியில் யாருக்கும் ஆத­ர­வ­ளிக்கப் போவ­தில்லை. அதற்­கான தேவையும் எமக்குக் கிடை­யாது. மாறாக சுதந்­திர கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் எதிர்­பார்க்கும் தீர்­மா­னத்­தையே நாம் எடுப்போம். அதனை இறுதி நேரத்தில் அறி­விப்போம். 

பொது­ஜன பெர­மு­னவின் போஷகர் பசில் ராபக்ஷ அண்­மையில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் போது அந்த கட்­சிக்கு சுதந்­திர கட்­சியின் ஆத­ரவு தேவைப்­ப­டு­கி­றது என்­பதை ஏற்றுக் கொண்டார். அதே போன்று எதிர்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­ப­க்ஷவும் இதன் முக்­கி­யத்­து­வத்தை அறிந்­தி­ருப்பார் என்று எதிர்­பார்க்­கின்றோம். 

எனவே இறுதி வரையில் பொது­ஜன பெர­மு­ன­வு­ட­னான கூட்­ட­ணியை வெற்­றி­ய­டையச் செய்யும் வகை­யி­லேயே பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுப்போம். அதே வேளை கட்­சியின் தனித்­துவத் தன்­மையை காட்டிக் கொடுத்து அதனை முன்­னெ­டுக்க மாட்டோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44