உவர் நிலங்களாக மாறியுள்ள ஆறாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு 

Published By: Digital Desk 3

03 Sep, 2019 | 10:06 AM
image

கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்தில் சுமார் ஆறாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு உவர் நிலங்களாக மாறியுள்ளதாக விவசாய  அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில்  குறிப்பிடுகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரிப்பிரதேசம் தொன்மையான ஒரு பிரதேசமாகக் காணப்பட்டாலும் அங்கு குடிநீர் பிரச்சனை ஒருபாரிய பிரச்சனையாக காணப்படுகின்றது.

கூடுதலான பயிர் செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியமையே இந்த குடிநீர் தட்டுப்பாட்டுக்கு பிரதான காரணமாக  அமைந்துள்ளது.

பூநகரிப்பிரதேசத்தை பொறுத்தவரையில் ஏறத்தாள ஆறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு உவர் நிலங்களாக மாறியுள்ளன.

கிளிநொச்சிமாவட்டத்தின் பூநகரிப்பிரதேசத்தில் கடந்த 1990ம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாகவும் அதன் பின்னர் உவர் நீர்ததடுப்பணைகள் பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்டமையாலும் பூநகரிப்பிரதேசத்தைச்சூழவுள்ள உவர் நீர்த்தடுப்பணைகள் அழிவடைந்தன.

இதனால் கடல் பெருக்குக்காலங்களில் உவர் நீர் விவசாய விளைநிலங்களுக்குள் உட்புகுந்து வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாறியிருப்பதாகவும் கடந்த 2010ம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் பல்வேறு திட்டங்களின் ஊடாக உவர் நீர்த்தடுப்பணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றும் இவ்வாறு உவர் நீர்த்தடுப்பணைகள் அமைக்கப்பட்டு பூநகரிப்பிரதேசத்தில் ஆங்காங்கே காணப்படுகின்ற சிறுகுளங்களையும் புனரமைத்து மழைநீரைத்தேக்குவதன் மூலம் நிலங்களின் உவர்த்தன்மையைப்போக்கி விவசாய நடவடிக்கையில் ஈடுபடமுடியும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22