கிளிநொச்சியிலிருந்து நல்லிணக்கத்துக்கான நடைபயணத்தை தொடர்ந்த உயர்தர மாணவர்கள் 

Published By: Digital Desk 4

02 Sep, 2019 | 10:39 PM
image

பருத்தித்துறையிலிருந்து தேவேந்திர முனை நோக்கி உயர்தர மாணவர்கள் இருவரால் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் கிளிநொச்சியிலிருந்து இராண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக மட்டக்களப்பு புனித மிக்கேல் பாடசாலை மாணவர்களால் நேற்று முந்தினம் இந்த நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த நடைபயணம் நேற்று பிற்பகல் கிளிநொச்சியை சென்றடைந்திருந்த நிலையில், மீண்டும் அவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கிளிநொச்சியிலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து நேற்று காலை 6.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடை பயணம் வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை நிறைவடையவுள்ளது.

இம்மாணவர்களின் நடைபயணத்திற்கு பலரும் தமது ஆதரவினை வெளிப்படுத்தி வருவதுடன் பயணத்தின் நடுவே அவர்களை சந்தித்து தமது மகிழ்ச்சியினையும் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து நாட்டில் நிலவிய இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை மற்றும் பாதுகாப்பு அற்ற நிலை காரணமாக சுற்றுலாத்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது.

இந்நிலையில் குறித்த பாதுகாப்பற்ற நிலை தற்போது இல்லை என்பதனை அறிவித்தல் மற்றும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24