மலையகத்தில் கன மழை : மக்கள் அசௌகரியம்

Published By: Robert

15 May, 2016 | 11:56 AM
image

மலையகத்தில் நேற்று இரவு முதல் கன மழையுடன், பனிமூட்டமும் கூடிய சீரற்ற காலநிலையே காணப்படுகின்றது.

அத்தோடு பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதன் காரணமாக வாகன சாரதிகள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கின்றனர்.

பிரதான வீதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் பனிமூட்டம் காணப்படுவதன் காரணமாக இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளை வாகனத்தை அவதானமாக செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.

இதன் காரணமாக வாகனத்தில் (ஹெட்லைட்) முன் விளக்கு போட்டுக்கொண்டு வாகன சாரதிகள் வாகனத்தை செலுத்துமாறு தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, பெய்த மழை காரணமாக ஹட்டன் தும்புருகிரிய வீதியில் அமைந்துள்ள குடியிருப்பில் ஒன்றில் மண்மேட்டுடன் கூடிய கட்டிடம் சரிந்து விழுந்ததில் குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு எந்தவிதமான உயிராபத்துகளும் ஏற்படவில்லை.

எனினும் இதில் பாதிக்கப்பட்ட நான்கு பேரை வேறு இடங்களுக்கு செல்லுமாறு கிராம சேவகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08
news-image

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலகுபடுத்த விரைவில்...

2024-04-15 22:57:31