யூடியூபில் நாளை வெளியாகும் ” காதலில்... ” பாடல்

Published By: Digital Desk 3

03 Sep, 2019 | 11:04 AM
image

பிரபல பியானோ கலைஞர் சௌந்தரி டேவிட் ரொட்றிகோ முதன் முதலில் தமிழில் இசையமைத்து தயாரித்துள்ள  “ காதலில் ” பாடல் நாளை காலை 9 மணிக்கு  சௌந்தரி யூடியூப் சேனலில் வெளியாகவுள்ளது.

குறித்த பாடல் அன்பை  பற்றியும், மெல்லிய இசையுடனான காதல் பற்றியும், ஒரு பெண்ணின் காதல் தோல்வி பற்றியும்,  கனவுகளிலாவது அவனை மீண்டும் கரம்பிடிப்பாள் என்று நம்புவது பற்றியும், அவன் இல்லாமல் அவள் தன்னையே இழந்ததை பற்றியும்  கூறுவதாக அமைந்துள்ளது.

இப்பாடலை உருவாக்கிய  சௌந்தரி டேவிட் ரொட்றிகோ இசையமைத்து விருது பெற்ற சோல் சவுண்ட் இலங்கை பெண் பாடகர் குழுவுடன் உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளார்.

குறித்த இப்பாடலை மேகன் தாக்சினி பாடியுள்ளார். இவர் பாடிய முதல் தனித்தமிழ் பாடல் இதுவாகும். கிருஷான் மகேசன் மற்றும் ஒ.ஜே தமிழ் ரப்பர் (OJ da Tamil Rapper ) ஆகியோருடன் பணிபுரிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன்  ஒரு தமிழ் கவர் சோங் ஒன்றையும் செய்துள்ளார்.  மேலும் இவர் மும்மொழி பின்னணி குரல் கலைஞராவார்.

குறித்த இப்பாடல், சௌந்தரி டேவிட் ரொட்றிகோ தயாரிப்பு, இசையமைப்பிலும் செந்தில்குமாரின் வரிகளிலும் உருவாகியுள்ளது. அத்தோடு இப்பாடலின் இசைக்கலவை மற்றும்  வடிவமைப்பு சவுண்ட் ஏசியா ஸ்டியோவிலும், பாடலுக்கான வீடியோ சச்சித் போகொட மற்றும் ருக்மந்த தாரக்க ஆகியோரின் தயாரிப்பில் போகஸ் ஆர்ட்டில் உருவாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இப்பாடலுக்கு இசை கலைஞர்களான பிரதீப் ரொட்றிகோ ( பேஸ் கிட்டார் ) , மகேந்திர பெஸ்கல் ( கிட்டார் )  , இந்திக ரஞ்சித் (புல்லாங்குழல் ) மற்றும் சேன் ஜோன் (ட்ரம்ஸ் )  ஆகியோரும்  இணைந்து இசை வழங்கியுள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37