‘ட்ரிப்’ அடிக்கும் யோகி பாபு

Published By: Digital Desk 4

02 Sep, 2019 | 11:54 AM
image

முன்னணி நாகைச்சுவை நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு‘ ட்ரிப்’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

Image result for yogi babu

அறிமுக இயக்குனர் டெனிஸ் இயக்கத்தில் தயாராக இருக்கும் அறிவியல் புனைவு கதையில் நாயகர்களாக யோகி பாபுவும், கருணாகரனும் நடிக்கிறார்கள். இதுகுறித்து இயக்குனர் பேசுகையில்,‘ 

இதுவரை தமிழில் பயாலஜிக்கல் சயின்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் ஜானரில் படங்கள் வெளியாகவில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் ‘ட்ரிப் ’படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் வண்ணப் பூச்சு பூசுவதற்காக யோகிபாபுவும், கருணாகரனும் அடர்ந்த காட்டுக்குள் செல்கிறார்கள். அங்கு ஐந்து இளைஞர்களும், நான்கு இளம்பெண்களும் திசைமாறி பயணித்து அங்கு வருகிறார்கள். இவர்கள் சந்திப்பிற்கு பிறகு ஏற்படும் திருப்பங்களும் அது தொடர்ந்த சம்பவங்களும் தான் படத்தின் திரைக்கதை. இந்தப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 16ஆம் திகதியன்று கொடைக்கானலில் தொடங்குகிறது. கொடைக்கானல் மற்றும் தலைக்கோணத்தில் தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.” என்றார்.

இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைக்க, உதயசங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். தீபக் படத்தை தொகுக்க. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் டெனிஸ்.  இந்த படத்தை தயாரிப்பாளர் விஸ்வநாதன் தயாரிக்கிறார்.

இந்தப்படத்தின் கதை ஏற்கனவே ‘கனா ’பட புகழ் நடிகர் தர்ஷன், விஜய் ரிவி தீனா, அருண் பாண்டியனின் வாரிசு கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘தும்பா’ படத்தின் கதையை நினைவுப்படுத்துவதுபோல் இருப்பதாக திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

இதனிடையே நடிகர் யோகிபாபு தற்போது , பிகில், பன்னிக்குட்டி, தர்பார், பப்பி, கன்னி ராசி என 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35