முஸ்லிம் பெண்களுக்கு ஜம்இய்யத்துல் உலமாவின் வேண்டுகோள்!

Published By: Vishnu

02 Sep, 2019 | 10:18 AM
image

முகத்திரை அணிந்து பொது இடங்களுக்குச் செல்வதால் ஏற்படும் அசெளகரியங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கால நேர சூழ்நிலைகளை கவனத்திற் கொண்டு புத்தி சாதூரியமாகவும், அவதானத்தோடும் நடந்து கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அனைத்து முஸ்லிம் பெண்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையில் செயலாளர் அஷ்ஷைக் எச்.உமர்தீன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, 

நாட்டில் நாடைபெற்ற துன்பியல் நிகழ்வைத் தொடர்ந்து நாட்டில் அசாதார நிலை காணப்பட்டதுடன், அவசரகால சட்டமும் அமுல் செய்யப்பட்டது. அவசர கால சட்டத்தின்போது முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைக்கான தற்காலிக தடையும் விதிக்கப்பட்டது.

எனினும் கடந்த 08.23 ஆம் திகதியுடன் அவசர கால சட்டம் நீக்கப்பட்டு பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் அதிகாரம் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனினும் நாட்டு மக்களின் அச்சமும் மனோபாவமும் முழுமையாக மாறியதாக தெரியவில்லை.

இந் நிலையில் முஸ்லிம் சகோதரிகள் முகத்திரை அணிந்து வெளியேறும்போது பல்வேறு அசெளகரியங்களுக்கு ஆளாக இடமுண்டு. அத்துடன் நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையில் இனவாத சக்திகளுக்கு இடமளிக்காமல் பார்த்துகு கொள்வது எமது பொறுப்பாகும்.

எனவே முகத்திரை அணிந்து பொது இடங்களுக்குச் செல்வதால் ஏற்படும் அசெளகரியங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கால நேர சூழ்நிலைகளை கவனத்திற் கொண்டு புத்தி சாதூரியமாகவும், அவதானத்தோடும் நடந்து கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறது. 

எஎமது அவதானமான செயற்பாடுகள் எமது உரிமைகளை உரிய முறையில் பாதுகாக்க நிச்சயம் உதவும் என்ற எதிர்பார்ப்பு ஜம்இய்யாவுக்கு இருக்கிறது.

இலங்கை முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் அனுபவித்து வந்த மதச் சுதந்திரமும், உரிமைகளும், கலாசாரமும் தொடர்ந்தும் பாதுகாக்க பட வேண்டும் என்பதே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06