5 விக்கெட்டுக்களினால் இலங்கையை சாய்த்த நியூஸிலாந்து

Published By: Vishnu

01 Sep, 2019 | 11:10 PM
image

இலங்கைக்கு எதிரான முதலாவது இருபதுக்கு -20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுக்கிளினால் வெற்றிபெற்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை அணியுடன் டெஸ்ட் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரானது 1:1 என்ற கணக்கில் சமநிலையில் முடிய இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி இன்றிரவு 7.00 மணிக்கு கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவல் 4 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது.

175 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூஸிலாந்து அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக மார்டீன் குப்டில் மற்றும் கொலின் முன்ரோ துடுப்பெடுத்தாட களமிறங்கினர்.

இலங்கை அணி சார்பில் முதல் ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட மலிங்கவின் நான்காவது பந்து வீச்சில் கொலின் முன்ரோ எதுவித ஓட்டமின்றி டக்கவுட் முறையில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார் (1:1).

3.2 ஆவது மார்டின் குப்டீல் அகில தனஞ்சயவின் சுழலில் சிக்கி 11 ஓட்டத்துடன் சானக்கவிடம் பிடிகொடுத்து வெளியேற, இரண்டாவது விக்கெட்டுக்காக களமறங்கிய டிம் செய்பர்ட்டும் 15 ஓட்டத்துடன் வணிந்து ஹசரங்கவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனால் நியூஸிலாந்து அணி 39 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. இதன் பின்னர் நான்காவது விக்கெட்டுக்காக ரோஸ் டெய்லர் மற்றும் கிரேண்ட்ஹோம் இணைந்து வலுவான இணைப்பாட்டத்தை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கையினரின் பந்து வீச்சுக்களை இருவரும் இணைந்து தெறிக்க விட நியூஸிலாந்து அணி 13 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களை பெற்றது. ஆடுகளத்தில் கிரேண்ட்ஹோம் 44 ஓட்டத்துடனும், டெய்லர் 38 ஓட்டத்துடனும் தொடர்ந்தும் அதிரடி காட்டினர்.

வெற்றியின் வாய்ப்பு நியூஸிலந்து அணிப் பக்கம் திரும்ப 14 ஆவது ஓவருக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள மலிங்க பந்தை கையில் எடுத்தார். அந்த ஓவருக்கு முதல் பந்தில் அவர் நான்கு ஓட்டத்தை வழங்கியபோதும் மூன்றாவது பந்தில் கிரேண்ட்ஹோமை போல்ட் முறையில் ஆட்டமிழக்க வைத்தார். (118-4).

தொடர்ந்து ஐந்தாவது விக்கெட்டுக்காக மிட்செல் சாண்டனர் களமிறங்கி துடுப்பெடுத்தாட நியூஸிலாந்து அணி 121 ஓட்டத்தையும், 15 ஆவது ஓவரில் 124 ஓட்டத்தையும் பெற, வெற்றிக்கு 30 பந்துகளில் 51 ஓட்டம் என்ற நிலையிருந்தது.

இந் நிலையில் 16.5 ஆவது ஓவரில் இலங்கை அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக திகழ்ந்து வந்த ரோஸ் டெய்லரை எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழக்க செய்து வெளியேற்றினார் வணிந்து ஹசரங்க.

அதன்படி ரோஸ் டெய்லர் 28 பந்துகளில் 2 ஆறு ஓட்டம், 3 நான்கு ஓட்டம் அடங்கலாக 48 ஓட்டத்துடன் வெளியேறினார். அவரின் வெளியேற்றத்தை தொடர்ந்து மழை குறுக்கிட்டதனால் போட்டி தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டது.

16.5 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை நியூஸிலாந்து அணி இழந்த நிலையில் 144 ஓட்டங்களை பெற்றிருக்க, வெற்றிக்கு 19 பந்துகளில் 31 ஓட்டம் என்ற நிலையிருந்தது.

மழையின் ஆட்டம் முடிவடைந்ததும் சிறிது நேரம் போட்டி கழித்து போட்டி ஆரம்பமாக 6 ஆவது விக்கெட்டுக்காக மிட்செல் சாண்டனர் களமிறங்கினார்.

18 ஓவரில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்களை பெற வெற்றிக்கு 12 பந்துகளுக்கு 18 ஓட்டமும்,  என்ற நிலையிருந்தது. ஆடுகளத்தில் மிட்செல் சாண்டனர் 11 ஓட்டத்துடனும் டார்லி மிட்செல் 16 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

இறுதியாக 6 பந்துகளுக்கு 3 ஓட்டம் ஒன்ற இலகுவான நிலையிருக்க, நியூஸிலாந்து அணி 19.3 ஆவது ஓவரில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 175 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

ஆடுகளத்தில் டார்லி மிட்செல் 25 ஓட்டத்துடனும், மிட்செல் சாண்டனர் 14 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

இவ்விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி நாளை மறுதினம் இதே மைதனாத்தில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22
news-image

டெல்ஹியுடனான போட்டியில் லக்னோவுக்கு சொந்த மண்ணில்...

2024-04-13 07:02:37