ஏமன்: சிறைச்சாலை மீது சவுதி கூட்டுப்படையின் வான்வழி தாக்குதலில்  60 பேர் பலி

Published By: Digital Desk 4

01 Sep, 2019 | 09:38 PM
image

 ஏமன் நாட்டில் ஹவுத்தி போராளிகளின் சிறைச்சாலை மீது சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் இன்று மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன

ஏமன்: சிறைச்சாலை மீது சவுதி அரேபியா கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல் - 60 பேர் பலி

ஏமன் நாட்டில் ஹவுத்தி போராளிகளின் சிறைச்சாலை மீது சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் இன்று நடத்திய வான்வழி தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்

ஏமன் நாட்டின் தலைநகரான சனா நகரின் அருகாமையில் உள்ள சில பகுதிகள் மற்றும்  துறைமுக நகரமான ஏடனில் முக்கிய இடங்களை ஆக்கிரமித்துள்ள ஹவுத்தி போராளிகள் மற்றும் பல்வேறு புரட்சிப்படையினர் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்டைநாடான சவுதி அரசின் உதவியுடன் புரட்சிப்படையினர் மீது ஏமன் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஏமனில் ஹவுத்தி போராளிகளின் சிறைச்சாலை மீது சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் இன்று நடத்திய வான்வழி தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

பிரேதங்களை கொண்டு செல்லும் மீட்பு படையினர்

அந்நாட்டின் தலைநகர் சனாவில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாமர் என்ற பகுதியில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் வலிமையாக உள்ளது. இவர்களுடன் போரிட்டு பிடிபடும் அரசுப்படையினரை கைது செய்து அடைத்து வைப்பதற்காக இங்குள்ள பல்கலைக்கழக கட்டிடம் ஒன்றை சிறைச்சாலையாக ஹவுத்திகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சிறைச்சாலையை குறிவைத்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் இன்று நடத்திய வான்வழி தாக்குதலில் 60-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் சுமார் 50 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என ஏமன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47