"கோடிக் கணக்குகளில் கொள்ளையிட்டு, சுகபோகமாக வாழ்பவர்களே என் மீது குறை கூறுகின்றனர்": சஜித்

Published By: J.G.Stephan

01 Sep, 2019 | 08:48 AM
image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து, பல வகையான விவாதங்களும், சவால்களும் தோற்றம் பெற்றிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. அந்தவகையில், உண்மையாகவே நிதி மோசடி செய்தவர்களே தன் மீது நிதி மோசடி செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார். 

தொடர்ந்து உரையாற்றிய அவர், எனக்கு கிடைக்கும் சம்பளத்தையும் கூட நான் வீடுகள் கட்டுவதற்காக வழங்குகின்றேன். இருந்தும் நான் மத்திய கலாசார நிதியத்தில் நிதி மோசடி செய்திருக்கிறேன் என கூறுகின்றார்..அவை அனைத்தும் நம் நாட்டின் விகாரை அமைப்புக்களில் உள்ளது என்பது யாருக்கும் தெரியாது என்றார். 


மேலும், ஊழல் கரை படியாத சஜித் பிரேமதாசவிற்கு இந்த அரசியல் வர்ணனை மூலம் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். பின்னர் விசாரணை ஒன்று நடாத்தப்பட வேண்டும் என பொய்யாக சொல்கின்றனர் என்றார்.  

அத்தோடு, இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நபர்கள் கோடிக் கணக்களில் கொள்ளையிட்டு தற்போது சுகபோக வாழ்வினை வாழ்ந்து வருபவர்களே என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41