பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்களாக மிஸ்பா, வாக்கார் யூனிஸ்?

Published By: Vishnu

30 Aug, 2019 | 05:09 PM
image

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக்கும், பந்துவீச்சுப் பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வக்கார் யூனிஸும் நியமிக்கப்படலாம் பாகிஸ்தான் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தலைமைப் பயிற்சியாளருக்கான நேர்காணல் நேற்று இஸ்லாமாபாத்தில் நடந்தது. 

இந்த நேர்காணலில் முன்னாள் மிஸ்பா உல் ஹக், டெஸ்ட்போட்டியின் தொடக்க பேட்ஸ்மேன் மோஸின் ஹஸன் கான், அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டான் நாளேடு வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளர்கள் குறித்த நேர்காணலில் பங்கேற்றவர்களில் மோஸின், டீன் ஜோன்ஸ் ஆகியோரின் கடந்த காலத்தில் வெற்றிகரமான வீரர்களாகத் திகழவில்லை. மோஸினுக்கு 65 வயதாகிறது, டீன் ஜோன்ஸ் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால், பாகிஸ்தான் வீரர் மனதை அறிந்து பயிற்சி அளிப்பது கடினம், இதற்குமுன் பல கசப்பான சம்பவங்கள் வெளிநாட்டு பயிற்சியாளரை நியமித்ததால் நடந்துள்ளன ஆதலால் இருவரும் நியமிக்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தான் அணிக்கான பந்துவீச்சுப் பயிற்சியாளருக்கான நேர்காணல் இன்று நடக்கிறது. 5 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழுவினர் பயிற்சியாளரை தேர்வு செய்ய இருக்கிறார்கள்.

இதற்கு முன் வக்கார் யூனிஸ் பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார், பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் இருந்தார். வக்கார் யூனுஸ் இந்த பதவிக்கு போட்டியிடுகிறார் என்பதால், போட்டியில் இருந்து மொஹமட் அக்ரம் விலகிக்கொண்டார்.

இதற்கிடையே மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கர்ட்னி வால்ஷ் வீடியோ கான்பிரன்ஷிங் மூலம் நேர்முகத்தேர்வில் பங்கேற்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வக்கார் யூனுஸுக்கு கடந்த 2011, 2016-ம் ஆண்டுகளில் இருமுறை தலைமைப் பயிற்சியாளராக வாய்ப்பு கொடுக்கப்பட்டது, 2007 ஆம் ஆண்டு பந்துவீச்சுப் பயிற்சியாளராக வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், சில சர்ச்சைக் காரணமாக அவர் பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், தலைமைப் பயிற்சியாளருக்கு டீன் ஜோன்ஸ், மோஸின் நிராகரிக்கப்படும் நிலையில் இயல்பாக மிஸ்பா உல் ஹக் தேர்வு செய்யப்படவே அதிகமான வாய்ப்பு இருக்கிறது. 

அதேபோல, வக்கார் யூனிஸுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று பெரும்பாலான கணிப்புகள் கூறப்பட்டாலும், அவரின் கடந்தகால சர்ச்சைகளை கருத்தில் கொண்டு வாய்ப்பு மறுக்கப்படுகிறதா அல்லது வால்ஷ் தேர்வு செய்யப்படுவாரா என்பதும் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22