மீண்டும் உருவாகும் ‘அக்னி நட்சத்திரம்’

Published By: Daya

30 Aug, 2019 | 01:49 PM
image

மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியாகி, பெரிய வெற்றி பெற்ற ‘அக்னி நட்சத்திரம்’ பெயரில், புதிய திரைப்படம் தயாராகிறது.

நட்சத்திர வாரிசுகளான கார்த்திக் மற்றும் பிரபு நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ என்ற பெயரில்1988 ஆம் ஆண்டில் படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது அதே பெயரில் நடிகர்கள் விதார்த் மற்றும் உதயா நடிப்பில் தயாராகவிருக்கிறது.  

இதுகுறித்து நடிகர் உதயா தெரிவிக்கையில்,‘ அறிமுக இயக்குநர் சரண் இயக்கத்தில் தயாராகியிருக்கும்க் ரைம் திரில்லர் கதைக்கு அக்னிநட்சத்திரம் என்ற தலைப்பு பொருத்தமாக இருந்தது. இது தொடர்பாக எம்முடைய நண்பரும் தயாரிப்பாளருமான ஐசரி கே.கணேஷ் அவர்களிடம் பேசிய போது, அவர் முறையாக பேச்சு வார்த்தை நடத்தி இந்த தலைப்பை எங்களுக்காக பெற்றுக் கொடுத்தார்.

நானும், விதார்த்தும் கதையின் நாயகர்களாக நடிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பினை செப்டெம்பர் மாத இறுதியில் சென்னை, ஏலகிரி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். வை. ஆர். பிரசாத் இசை அமைக்க, எல்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் எமக்கும், விதார்த்துக்கு ஜோடியாக நடிக்க முன்னணி மற்றும் வளர்ந்து வரும் நடிகைகள் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றார்.

அக்னி நட்சத்திரம் என்ற பெயரில் உதயா மற்றும் விதார்த் ஆகியோர் நடிப்பில் புதிய திரைப்படமொன்று தயாராவது குறித்து திரையுலக ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

இதனிடையே நடிகர் உதயாவின் நடிப்பில் கடைசியாக,‘ உத்தரவு மகாராஜா’ என்ற திரைப்படம் வெளியானது என்பதும், விதார்த் நடிப்பில் ‘காற்றின் மொழி ’என்ற படம் வெளியானது என்பதும் கவனிக்கத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37