பருத்தித்துறை துறைமுகத்திற்கான அடிக்கல்லை நாட்டினார் ஜனாதிபதி

Published By: Daya

30 Aug, 2019 | 01:29 PM
image

நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்குச் சென்ற  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பருத்தித்துறை துறைமுகத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

175 மில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ள இத் திட்டத்தின ஆரம்ப பணிகள் இன்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (30) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

”மைத்திரி ஆட்சி – நிலையான நாடு” மற்றும் ”பேண் தகு மீன்பிடி கைத்தொழிற் துறையின் ஊடாக மீன்பிடித் துறையில் தெற்காசிய வலயத்தில் முன்னோடியாகத் திகழ்தல்” எனும் எதிர்கால நோக்கிற்கமைய வடக்கு மீன்பிடித் துறையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் இந்த மீன்பிடித் துறைமுகம் இலங்கையில் இதுவரை நிர்மாணிக்கப்பட்ட மிக விசாலமான மீன்பிடித் துறைமுகமாகும். இதற்காக 12,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

பாரியளவிலான 300 படகுகளுக்கு தேவையான வசதிகளை ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய இந்த துறைமுகத்தின் இறங்குதுறை 7.1 ஹெக்டயார் பரப்பளவையும் துறைமுகப் படுக்கை 18.6 ஹெக்டயார் பரப்பினையும் கொண்டுள்ளதுடன், 880 மீற்றர் நீளத்தையும் 480 மீற்றர் அகலத்தையும் கொண்டுள்ளது. 

உலகிலுள்ள நவீன ரக மீன்பிடி படகுகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தல், பிடிக்கப்படும் மீன்களை கரை சேர்த்தல். எரிபொருள் மற்றும் ஏனைய வசதிகளைப் பெற்றுக்கொள்ளல், படகுகளைப் பழுதுபார்த்தல், ஐஸ் மற்றும் குளிர்சாதன வசதிகள், படகுகளுக்கான இயந்திரங்களைப் பெற்றுக்கொள்ளல், மீன் விற்பனை, வலை தயாரிப்பு, கடைத்தொகுதி, கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான வசதிகள், கரையோரப் பாதுகாப்பு சேவைகள், மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளின் சேவைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இந்த மீன்பிடித் துறைமுகத்தில் பெற்றுக்கொள்ள முடியும். 

அமைச்சர்கள் பீ.ஹெரிசன், அப்துல் ஹலீம், வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்கள் காதர் மஸ்தான், அங்கஜன் ராமநாதன், எம்.ஏ. சுமந்திரன், மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட பெரும்பாலான மாகாண மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.      

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53