மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் அரசாங்கத்திற்கு காலக்கேடு  

Published By: Vishnu

29 Aug, 2019 | 08:47 PM
image

(ஆர்.விதுஷா)

சுகாதார,போசனை ,சுதேச மருத்துவ அமைச்சர்  ராஜித சேனாரதனவின்  தன்னிச்சையான செயற்பாடுகளினால் ஊழல் மோசடி இடம்பெற்று வருவதாக கூறியிருக்கும் அரசாங்க மருத்தவ அதிகாரிகள் சங்கம் அவற்றுக்கு உரிய  தீர்வை பெற்றுத்தருவதற்கு அரசாங்கத்திற்கு  இரண்டு நாட்கள்  கால  அவகாசம்  கொடுத்துள்ளது.  

அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்துத்தட்டுப்பாடு நிலவுகிறமை  ,   மருத்துவக்கல்விக்கான தரத்தில் காணப்படும் குறைபாடு உள்ளிட்ட  குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கூறி அரசாங்க  வைத்திய அதிகாரிகள்  சங்கத்தினர்  உரிய  தரப்பினரிடத்தில்   தொடர்ந்தும்  கோரிக்கைககளை  முன்வைத்து  வந்தனர்.  

இருப்பினும்  அந்த கோரிக்கைகளுக்கு  உரிய  தீர்வு  கிடைக்கப் பெறாமையினால்  அந்த சங்கத்தினர் கடந்த 22 ஆம்  திகதி ஒரு நாள்  வேலை நிறுத்த போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். ஆயினும் அவர்களுடைய கோரிக்கைகளுக்கான  உரிய  தீர்வு  கிடைக்கப்பெறவில்லை  .  

இந்த நிலையிலேயே அந்த  சங்கத்தினர்  எதிர்வரும்  இரண்டு நாட்களுக்குள் தமது  கோரிக்கைகளுக்கு  திர்வு  காணா விட்டால் அரசாங்க  மருத்துவ  அதிகாரிகள்  சங்கத்தின்  மத்திய செயற்குழு  கூட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான தீர்மானம்  எடுக்கப்படும் என  எச்சரித்துள்ளது.  

அரசாங்க  மருத்துவ  அதிகாரிகள்  சங்கத்தின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற  ஊடகவியலாளர்  சந்திப்பின்போது  கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே மேற்கண்டவாறு கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37