"ஜனாதிபதியுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்திய ஐ.தே.க. முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?"

Published By: Vishnu

30 Aug, 2019 | 09:54 AM
image

(நா.தினுஷா)

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கும் இடையில் இரகசிய பேச்சுவாரத்தை இடம்பெற்றிருந்தால் அது கட்சிக்கும் ஆதரவாளர்களுக்கும் இழைக்கும் துரோகச் செயல் என்று கூறியிருக்கும் அமைச்சர் சுஜீவ சேனசிங்க அந்த உறுப்பனர்களுக்கு எதிராக கட்சி எடுக்கும் நடவடிக்கை என்ன என்பதை கேட்டு அந்த கட்சியின் பொதுச் செய்லாளர் அகில விராஜ் காரியவசத்துக்கு அமைச்சர் சுஜீவ சேனசிங்க இன்று  கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.  

இந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது ; 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான யோசனையை முன்வைப்பது தொடர்பில் கட்சியின் முக்கியமான அங்கத்தவர்கள் சிலர்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து  கலந்துரையாடியள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிகியிருந்தன.  

ஐக்கிய தேசிய கட்சியின்  செயற்குழு அல்லது பாராளுமன்றக் குழுவின் அனுமதியின்றி  அந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து உங்களின் நிலைபாட்டை அறிந்துக்கொள்ள விரும்புகிறேன்.  

அவ்வாறானதொரு கலந்துரையாடல் இடம்பெற்றிருக்குமாக இருந்தால்  அந்த பேச்சுவாரத்தையில் பங்கு பற்றியிருந்த தரப்பினருக்கு எதிராக  கட்சியின் விதிமுறைகளுக்கு அமைய எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள்  தொடர்பில்  தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01