(எம்.சி.நஜிமுதீன்)

வற் வரியினை 15 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள முன்னெடுப்பதற்கு முன்னிலை சோசலிசக் கட்சி தீர்மானித்துள்ளது

 

'வற்வரி வரியை வாவஸ் பெறுஎனும் தொனிப்பொருளில் ஏற்பாடுசெய்துள்ள இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை பிரதான நகரங்கள் உட்பட பல பிரதேசங்களிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுஇதில் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதி

கள் கலந்துகொள்வுள்ளதாக கட்சியின் பிரசாரச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

வற் வரியை அதிகரித்து மக்கள் மீது சுமை சுமத்தப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாதுஅரசாங்கம் மக்களுக்கு பொருளாதர ரீதியில் சலுகை வழங்க வேண்டும்.அதனை விடுத்து வரிகளை விதித்து மக்களின் வாழ்வாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கக்கூடாதுஎனவே வற் வரி தொடர்பில் அரசாங்ம் எடுத்துள்ள தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்மேலும் மக்கள் மீது சுமை ஏற்படுத்தாத பொருளாதாரக் கொள்கையினை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும்

 

எனவே வற் வரி அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் வேலைத்திட்டத்திற்கெதிராக எமது கட்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதுபிரதான நகரங்கள் உட்பட நாட்டின் பல பிரதேசங்களிலும் இவ்வெதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.