ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு, ஷாமிலி நடிப்பில், கணேஷ் விநாயக் இயக்கத்தில் “வீரசிவாஜி“ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்திற்கு இமான் இசையில்.. டங்கா மாரி ஊதாரி  மற்றும் எங்க தல எங்க தல  பாடல்களை எழுதிய ரோகேஷ் வரிகளில் வரும் “தாறு மாறு தக்காளி சோறு“ என்று தொடங்கும் பாடலை சிம்பு நேற்று பாடினார்.