தொடரும் ஆளில்லா விமானதாக்குதல்கள்- மத்திய கிழக்கில் புதிய பிராந்திய மோதல் அபாயம்

Published By: Rajeeban

29 Aug, 2019 | 03:25 PM
image

சிரியா ஈராக் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் சமீபத்தில் இடம்பெற்றுள்ள ஆளில்லாத விமானதாக்குதல்கள் காரணமாக பிராந்தியத்தில் புதிய மோதல் யுகமொன்று உருவாகலாம் என  இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அதிநவீன ஆயுத தாக்குதல்கள் காரணமாக இரகசியமாக பாதுகாக்கப்படும் இலக்குகளும்  தாக்குதலிற்கு உள்ளாககூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதை தொடர்ந்தே புதிய பிராந்திய மோதல் குறித்த அச்சம் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலிற்கும் ஈரானிற்கும் இடையிலான மோதல் சூழ்நிலை அதிகரிப்பதற்கு ஆளில்லா விமானதாக்குதலே காரணமாக அமைந்துள்ளது.

இந்த ஆளில்லா விமானங்கள் சிறியனவாகவும் இலகுவில் தயாரிக்ககூடியனவாகவும் ராடர்களில் பார்வையிலிருந்து தப்பக்கூடியனவாகவும் காணப்படுகின்றன.

இஸ்ரேல் கடந்த நான்கு வருடகாலமாக காஸா மீதான தனது நடவடிக்கைகளிற்கு ஆளில்லா விமானங்களையே பயன்படுத்துகின்றது.

இதேவேளை ஈரானும் இஸ்ரேலிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

கடந்த காலங்களில் தனக்கு சார்பான ஆயுத குழுக்களை பயன்படுத்திய ஈரான் தற்போது தானே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது.

ரொக்கட்களிற்கு மேம்பட்ட வழிகாட்டுதல் அமைப்பு பொறிமுறைகளை பொருத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த ஹெஸ்புல்லா அமைப்பினரிற்கு எதிராக தாங்கள் அனுப்பிய ஆளில்லா விமானங்களே பெய்ரூட்டில் ஞாயிற்றுக்கிழமை விழுந்து வெடித்துள்ளன என இஸ்ரேலிய இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

லெபனான் தலைநகரில் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்த ஆளில்லா விமானங்கள் விழுந்து வெடித்துள்ளன..இதனை தாங்கள்கைப்பற்றியுள்ளதாகவும் அவற்றில் தற்போது வெடிமருந்துகளை பொருத்தியுள்ளதாகவும் கிளர்ச்சிக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் தனது இந்த நடவடிக்கை மூலம் கொலைமுயற்சியொன்றில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது ஹெஸ்புல்லா அமைப்பின் முக்கிய நிலையொன்றை அழிக்க முயற்சி செய்திருக்கலாம் என இரு இராஜதந்திரிகள்  தெரிவித்துள்ளனர்.

இதேவேளை புதன்கிழமை தனது எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக லெபனான் தெரிவித்துள்ளது.

இதேவேளை இஸ்ரேல் தங்கள் நிலைகள் மீது ஆளில்லா விமான தாக்குதல்களை  மேற்கொண்டுள்ளதாக ஈராக்கின் சியா கிளர்ச்சிக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிற்கு அருகிலுள்ள ஈரானிய நிலைகளிற்கு ஆயுதங்களை அனுப்பவதற்கு பயன்படுத்தப்படும் பகுதியொன்றின் மீதே தாக்குதல் இடம்பெற்றுள்ளது என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஈராக்கிற்குள் இயங்கும் ஈரானிற்கு சார்பான ஆயுத குழுக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்காக ஏவுகணைகள் பொருத்தப்பட்ட நவீன ஆளில்லா விமானங்களை ஈராக்கிற்குள் அனுப்பியுள்ளது என அமெரிக்க ஈராக்கிய ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47