பல்­க­லைக்­க­ழக கல்­வி­சாரா ஊழி­யர்கள் வேலை­நி­றுத்தம்

Published By: Vishnu

29 Aug, 2019 | 09:24 AM
image

(எம்.மனோ­சித்ரா)

பல்­க­லைக்­க­ழ­கங்­களின் கல்­வி­சாரா ஊழி­யர்கள் நேற்றுப் புதன்­கிழமை ஆரம்­பித்த வேலை நிறுத்த போராட்டம் இன்றும் தொடரும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமது சம்­பள உயர்வு தொடர்பில் அண்­மையில் அர­சாங்­கத்­திடம் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்ட போதிலும் இது­வ­ரையில் தீர்­வெ­துவும் வழங்­கப்­ப­டா­மையின் கார­ண­மாக வேலை நிறுத்­தத்தில் ஈடு­ப­டு­வ­தாகத் தெரி­வித்­துள்­ளனர்.  நேற்­றைய தினம் ஆரம்­பிக்­கப்­பட்ட கல்வி சாரா ஊழி­யர்­களின் வேலை நிறுத்தப் போராட்டம் கார­ண­மாக  பல்­க­லைக்­க­ழ­கங்­களின் கல்விச் செயற்­பா­டுகள் ஸ்தம்­பித நிலையை அடைந்­தன. 

இதே­வேளை  சம்­பள உயர்வு தொடர்பில் எம்மால் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கைக்கு உயர் கல்வி அமைச்­சினால் தீர்வு வழங்­கப்­ப­ட­வில்லை. இது தொடர்பில் அழுத்தம் கொடுப்­ப­தற்­கா­கவே போராட்­டத்தில் ஈடு­பட தீர்­மா­னித்­த­தாகவும் கல்­வி­சாரா ஊழி­யர்கள் தெரி­வித்­துள்­ளனர். 

இது தொடர்பில் நிதி அமைச்­ச­ருடன் மேற்­கொள்­ளப்­பட்ட பேச்­சு­வார்த்­தையின் மூலம் எந்­த­விதத் தீர்வும் எட்­டப்­ப­ட­வில்லை என அனைத்து பல்­க­லைக்க­ழகத் தொழிற்­சங்க ஒன்­றி­யத்தின் தலைவர் தம்­மிக எஸ். பிரி­யந்த தெரி­வித்­துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் உயர்­கல்வி அமைச்சின் செய­லாளர் மாயா­துன்னே, பல்­க­லைக்­க­ழக கல்வி சாரா ஊழி­யர்­களின் சம்­பளப் பிரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்வு காணும் வரையில் திறை­சே­ரியில் இருந்து மேல­திகக் கொடுப்­ப­னவை வழங்­கு­வ­தற்கு அனு­மதி கிடைத்­துள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ளார். இந்தக் கொடுப்­ப­னவு விடயத்தை ஏற்றுக்கொள்வதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் பல்கலைக்கழக தொழிற்சங்கம் தமக்கு ஏதும் தெரி விக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56