சிறுநீரக செயலிழப்பிற்கான சிறந்த நிவாரணம்

Published By: Digital Desk 4

28 Aug, 2019 | 09:02 PM
image

 

இன்றைய திகதியில் எம்முடைய வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு அல்லது ஏனைய வயதில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களில் யாருக்கேனும் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று மருத்துவர்கள் எடுத்துரைத்துவிட்டால் நாம் மனதளவில் சோர்வடைந்துவிடுகிறோம்.  

இனி அப்படிசோர்வடையத் தேவையில்லை. ஏனெனில் சிறுநீரக செயலிழப்பு எந்த நிலையில் இருந்தாலும் அதற்குரிய சிகிச்சையும், சிறந்த நிவாரணமும் இருக்கிறது.

சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று மருத்துவர்கள் உங்களிடம் விளக்கினால், நீங்கள் மருத்துவ நிபுணர்களிடம் அவை தற்காலிக சிறுநீரக செயலிழப்பா? அல்லது நிரந்தர சிறுநீரக செயலிழப்பா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

பிறகு நிரந்தர சிறுநீரக செயலிழப்பு என்றால் அவை எந்த நிலையில் இருக்கிறது என்று  அதாவது தொடக்க நிலையா? இரண்டாம் நிலையா? அல்லது மூன்றாம் நிலையா? அல்லது முற்றிய நிலையா? என்பதைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

அத்துடன் உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இதய பாதிப்பு, பைபாஸ் சர்ஜேரி, இதயம் பலவீனமாக இருக்கிறது என்ற நிலையில் அவர்களுக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருக்கிறது என்றால்.. இதற்காக தற்போது Continuous Ambulatory Peritoneal Dialysis என்ற டயலாலிஸிஸ் சிகிச்சை முறை அறிமுகமாகி, சிறந்த பலனை அளித்து வருகிறது. 

இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட நோயாளியின் வயது இருபது அல்லது முப்பதிற்குள் இருந்தால் அவர்களுக்கு Blood Dialysis அல்லது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை என்ற சிறந்த தீர்வுகள் உள்ளன. ஆனால் டயாலிசிஸ் குறித்து மக்களிடம் தவறான நம்பிக்கைகள் அதிகம் இருக்கிறது. இதுகுறித்த முறையான விழிப்புணர்வு மேம்பட வேண்டும்.

ஆனால் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கு ஆளாகுபவர்கள் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, அதனை முறையாக கட்டுப்படுத்தாததால் தான் ஏற்படுகிறது என்று அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே இரத்த அழுத்த பாதிப்பு மற்றும் சர்க்கரை நோய் இரண்டையும் கட்டுபபாட்டில் வைத்துக் கொள்வதில் முழுமையான கவனத்தைச் செலுத்தவேண்டும். சிலருக்கு இதன் காரணமாக கண், இரத்த நாளங்கள், இதயம் போன்ற உறுப்புகளிலும் பாதிப்பு ஏற்படும். 

எம்மில் சிலருக்கு குறிப்பாக இளம் வயதினருக்கு திடிரென்று வாந்தி, இதய செயலிழப்பு, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வீரியமிக்க வலி நிவாரணி மாத்திரைகளை சாப்பிடுதல் போன்றவற்றின் காரணமாக சிறுநீரக செயலிழப்பு ஏற்படக்கூடும். இதனை சரியான முறையில் பரிசோதித்து அவை தற்காலிக சிறுநீரக செயலிழப்பு என்பதை உறுதிப்படுத்திக் கொண்டால்.. அதற்குரிய சிகிச்சையை செய்து சிறுநீரகத்தை மீண்டும் பழைய நிலைக்கு இயங்க வைக்கலாம்.

டொக்டர் பாலசுப்ரமணியம்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29