தலைசிறந்த வீரர் பென்ஸ்டோக்சா? ஐசிசிக்கு எதிராக சச்சின் ரசிகர்கள் போர்க்கொடி

Published By: Rajeeban

28 Aug, 2019 | 04:34 PM
image

இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென்ஸ்டோக்சினை   உலகின் தலைசிறந்த வீரர் என ஐசிசி மீண்டுமொரு குறிப்பிட்டுள்ளமைக்கு எதிராக சச்சின் டெண்டுல்கரின்  ரசிகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இங்கிலாந்து அணி 2019 உலக கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் சச்சின் டெண்டுல்கருடன் பென்ஸ்டோக்ஸ் காணப்படும் படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டிருந்த ஐசிசி உலகின் தலைசிறந்த வீரருடன் சச்சின் காணப்படுகின்றார் என குறிப்பிட்டிருந்தது.

புதன்கிழமை மீண்டும் அதே படத்தை நாங்கள் ஏற்கனவே தெரிவித்தோம் என்ற தலைப்பின் கீழ் ஐசிசி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது.

ஐசிசியின் இந்த பதிவிற்கு சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

நீங்கள் சொல்வதற்காக நாங்கள் இதனை நம்புவோம் என கருதவேண்டாம் என தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள  சேத்தி என்பவர் உலகின் தலைசிறந்த வீரர் சச்சின் டெண்டுல்கரே , கிரிக்கெட் உலகில் அனைத்தும் அவரிற்கு பின்னரே ஆரம்பமாகின்றன எனவும் பதிவு செய்துள்ளார்.

ஒருவர் டெஸ்ட் போட்டிகளில் 15,921 ஓட்டங்களையும் ஒருநாள் போட்டிகளில் 18426 ஓட்டங்களையும் பெற்றவர், என குறிப்பிட்டுள்ள நிக் என்பவர் மற்றையவர் 3479 டெஸ்ட் ஓட்டங்களையும் 2628 ஒரு நாள் போட்டி ஓட்டங்களையும் பெற்றவர் என குறிப்பிட்டுள்ளார்.

நான் சதங்கள் குறித்து பேசட்டுமா எனவும் அந்த ரசிகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சச்சினிற்கு இதனை விட பெரிய கௌரவத்தை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ள தௌகிர் அகமட் என்பவர் 90 களில் முழு இந்திய அணியையும் தனது தோளில் சுமந்தவர் சச்சின் என குறிப்பிட்டுள்ளார்.

பென்ஸ்டோக் இரு தடவைகளும் மோசமான நடுவர் தீர்ப்பினால் வெற்றிபெற்றார் என தெரிவித்துள்ள மிட்ர் மனவ் என்பவர் பென்ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடினார் ஆனால் அந்த இரு இனிங்ஸ்களையும் தலைசிறந்தவை என குறிப்பிட முடியாது என பதிவு செய்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20