அனுஸ்கா சர்மாவுடன் இந்திய வீரர்கள் படகுச்சவாரி

Published By: Rajeeban

28 Aug, 2019 | 12:37 PM
image

மேற்கிந்திய அணியை 318 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய அணியினர் அந்த வெற்றியை கொண்டாடுவதை காண்பிக்கும் பல படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.

இதில் கேஎல் ராகுல் பதிவு செய்துள்ள படகுச்சவாரி சந்திப்பு படம் வைரலாகிவருகின்றது.

இந்திய அணியின் தலைவர் விராட்கோலியின் மனைவி அனுஸ்கா சர்மா இந்திய அணியினருடன் கரிபியன் தீவுகளில் படகுச்சவாரி மேற்கொள்ளும் படத்தைகேஎல் ராகுல் வெளியிட்டுள்ளார்.

கேஎல் ராகுல் இந்த படத்தை  தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். முடிவற்ற நீலங்கள் என அவர் பதிவு செய்துள்ளார்

குறிப்பிட்ட படத்தில் அனுஸ்கா சர்மாவுடன் விராட்கோலி ரவிச்சந்திரன் அஸ்வின் மயங் அகர்வால் கேஎல் ராகுல் ஆகியோர் காணப்படுகின்றனர்.

இந்த படத்தை அஸ்வினும் பகிர்ந்துகொண்டுள்ளதுடன் கடலும் சூரிய அஸ்தமனமும் ஆபத்தானகலவை  என எழுதியுள்ளார்.

இதேவேளை அன்டிகுவாவின் கொக்கே பேயில் தான் காணப்படும் படத்தை இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி வெளியிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right