முன்­னேஸ்­வரம் தேர்த்திரு­வி­ழாவில் நேர மாற்றம்

Published By: Vishnu

28 Aug, 2019 | 10:14 AM
image

பாது­காப்புக் கார­ணங்­க­ளுக்­காக சிலாபம், முன்­னேஸ்­வரம் தேவஸ்­தா­னத்தின் தேர்த் திரு­வி­ழாவில் நேர மாற்­றங்கள் செய்­யப்­பட்­டுள்ளன. 

கடந்த 17ஆம் திகதி கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­ப­மான மகோற்­சவம், எதிர்­வரும் செப்­டம்பர் மாதம் 15ஆம் திகதி வரை நடை­பெ­று­கி­றது. கொடி­யேற்ற தினம் முதல் பொலிஸ், இரா­ணு­வத்தின் பலத்த பாது­காப்­புடன் திரு­விழா நிகழ்­வு கள் நடை­பெற்று வரு­கின்­றன. 

எதிர்­வரும் 12ஆம் திகதி வியா­ழக்­கி­ழழை நடை­பெ­ற­வுள்ள தேர்த் திரு­விழா நிகழ்­வுகள் வழ­மைக்கு மாறாக நேர மாற்­றங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன. 12 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு வசந்த மண்­டப பூஜை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. அதனைத் தொடர்ந்து காலை 9.00 மணிக்கு அன்னை வடி­வாம்­பிகா தேவி சமே­தரராய் முன்­னை­நாதப் பெரு­மானை பரி­வார மூர்த்­தி­க­ளுடன் திருத் தேருக்கு எழுந்­த­ருளச் செய்­யப்­படும். 

காலை 10.00 மணிக்கு பஞ்ச ரதங்­களும் புறப்­படும். பிள்­ளையார், சுப்­பி­ர­ம­ணியர் சுவாமி, அம்பாள், சண்­டேஸ்­வரர் என முறையே 5தேர்­களும் திரு­வீதி உலா­ வ­ரு­வ­துடன் சுமார் ஒரு மணி 45 நிமி­டத்தில் மீண்டும் தேர்கள் ஆலயத்தை வந்­த­டை­ய­வுள்­ளன. 

திரு­வீதி உலா­வின்­போது அர்ச்­சனை தட்­டுகள் ஏற்­று­க்கொள்­ளப்­ப­ட ­மாட்­டாது. பகல் 12.00 மணிக்கு உச்­சி­காலப் பூஜை­யுடன் மாலை 5.00 மணி­ வரை சுவாமி, அம்பாள் பரி­வார மூர்த்­திகள் தேரி­லேயே எழுந்­த­ரு­ளி­யி­ருப்பர். 

பகல் 12.00 மணி முதல் மாலை 5.00 மணி­ வரை அடி­யார்­களின் அர்ச்­சனைத் தட்­டுகள் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். அதன் பின்னர் சுவாமி, அம்­பாளை பச்சை பட்­டாடை அணி­வித்து (பச்சை சாத்தி) கோயி­லுக்கு எழுந்­த­ருளச் செய்வார். 

வழ­மை­யாக காலை 10.00 மணிக்கு வசந்­த ­மண்­டப பூஜையும் 11.00 மணிக்கு சுவாமி, அம்பாள் திருத்­தே­ருக்கு எழுந்­த­ரு­ளலும் பகல் 12.00 மணிக்கு உச்­சி­காலப் பூஜை­யு­டன்­தேர்கள் புறப்படுவதுமாக இருந்து வந்துள்ளது. எனினும் இம்முறை பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ முன்னேஸ்வர தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56