பளையில் மீட்க்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை தீவிரம்!

Published By: Vishnu

27 Aug, 2019 | 09:50 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பளை, கராண்டிய பகுதியில் நேற்றைய தினம் மீட்க்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் உயர்மட்ட தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.

குறித்த அயுதங்கள் எங்கிருந்து எவ்வாறு கொண்டுவரப்பட்டன, அவற்றை மறைத்து வைத்ததன் நோக்கம், அதற்கு உதவியவர்கள் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் இந்த தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதிகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, தற்போது பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரின் தடுப்பில், யாழ். பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் பளை சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனின் வாக்கு மூலத்துக்கு அமைய நேற்றைய தினம் இந்த ஆயுதங்கள் மீட்க்கட்டுள்ளன. 

ஏ.கே.47 துப்பாக்கி ஒன்று,  அந்த துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் இரு மெகசின்கள், அத்துப்பககிக்கு பயன்படுத்தப்படும் 120 தோட்டாக்கள், 11 கைக்குண்டுகள்,  பீ.ஈ.10 ரக வெடிபொருள் என சந்தேகிக்கபப்டும் வெடிபொருள் 10 கிலோ, தொலைநோக்கி உள்ளிட்ட பல ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இவ்வாறு மீட்க்கப்பட்டிருந்தன.

இதவேளை முக்கியஸ்தர்கள் மூவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், புலிகள் அமைப்பை மீள ஏற்படுத்த இரகசிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படும் இரு விடயங்கள் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனிடம் தீவிர விசாரணைகள் தற்போதும் இடம்பெற்றுவருவதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் உயர்மட்ட தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33