தீபாவளிக்கு விடுதலையாகவுள்ள கைதி

Published By: Digital Desk 4

27 Aug, 2019 | 06:11 PM
image

நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகியிருக்கும் ‘கைதி ’திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தேவ்’ படத்தின் தோல்விக்கு பிறகு நடிகர் கார்த்தி ‘மாநகரம்’ என்ற வெற்றிப் படத்தை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ‘கைதி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லர் பிரிவில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடி இல்லை. அவருடன் நரேன், தீனா, ஜோர்ஜ் மரியான், விஜய் டி வி தீனா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு,சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.

படத்தின் அனைத்து பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியதால் ‘கைதி’ தீபாவளி திருவிழாவை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் வெளியாகிறது. இதை அப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்ஆர் பிரபு ட்விட்டர் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து தீபாவளிக்கு தளபதி விஜய் நடிக்கும் ‘பிகில்’ மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ மற்றும் பொக்ஸ் ஒபீஸ் சுப்பர் ஸ்டார் கார்த்தி நடிக்கும் ‘கைதி ’ஆகிய படங்கள் வெளியாகிறது. இதனால் இந்த மூன்று முன்னணி நட்சத்திரங்களின் ரசிகர்களும் உற்சாக கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

இதனிடையே நடிகர் கார்த்தி தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் என பெயரிடப்படவிருக்கும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37