தற்போது நாட்டில் சிறுபான்மை மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் வந்துள்ளது ;.இராதாகிருஸ்ணன்

Published By: Digital Desk 4

27 Aug, 2019 | 05:08 PM
image

பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் முஸ்லிம் மக்களை ஒதுக்கிவிட்டு வாழ முடியாது. அண்மையில் இந்த நாட்டில்  ஏற்பட்ட அசாம்பாவிதம் காரணமாக இந்த நாட்டில் குறிப்பாக முஸ்லிம் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்னர். அவர்களுக்கு சகல துறைசார்ந்த விடயங்களிலும் பின்னடைவு ஏற்பட்டு வருகின்றது. 

இதனை அனுதிக்க முடியாது. இந்நிலை தொடருமாயின் நாட்டில் பொருளாதார ஸ்தீரதன்மை ஏற்படும் இதை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும் என் விஷேட பிரதேச அபிவிருத்தி அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான  கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் கூறுகின்றார்.

நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட ஹப்புகஸ்தலாவை அல்மின்ஹாஜ் தேசிய கல்லூரியில் கல்வி அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்படும் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்டத்தின் கீழ் 82.5 மில்லியன் ரூபா செலவில் கட்டபட்ட மூன்று மாடி கட்டடம் அதிபர் விடுதி ஆசிரியர் விடுதி அகியன பாடசாலை சமூகத்திற்கு கையளிக்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இந் நிகழ்விற்கு கொத்மலை பிரதேச ஐ.தே.கட்சி அமைப்பாளர் அசோக ஹேரத் உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் கல்வி அதிகாரிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். 

இதன் பொழுது மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டலும் கலை நிகழ்சிகளும் நடைபெற்றன.

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்.

இந்த நாட்டில் தமிழர்களும் முஸ்லிம்களும் சிறுபான்மையாக வாழும் மக்கள். இவர்களை இனைத்துக் கொண்டு தான் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும். இதனை உணர்ந்துக் கொண்டு பெருபான்மை மக்கள் செயற்பட வேண்டும்.

தற்போது இந்த நாட்டில் ஜனாதிபதி தேர்தல் வந்துள்ளது. இதற்கு  எங்களின் ஒத்துழைப்பு அவசியம். தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கு மூன்று பெரும்பான்மை கட்சிகள் மும்முறமாக செயற்பட்டு வருகின்றனர். 

இதில் இரண்டு கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தெரிவு செய்து விட்டது. ஐ.தே.கட்சி இன்னும் பொருத்தமான ஒருவரை தெரிவு செய்யவில்லை. நீங்கள் கவலைபட வேண்டாம் உங்கள் மனதில் உள்ளவரும் என்மனதில் உள்ளவரும் கட்டாயமாக ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யபடுவார். 

அவருக்கு உங்கள் ஆதரவை வழங்குகள். தற்போது இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் வந்து உள்ளது. இதை உணர்து நாம் செயற்பட வேண்டும் என்று கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01