இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று இந்தியாவிற்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  இன்று (13) பிற்பகல் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

பிரித்தானியாவிற்கான இரண்டுநாள் விஜயத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்த ஜனாதிபதி, புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்ததுடன், இந்திய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ராவோ இந்திரஜித் சிங் அவர்கள் உள்ளிட்ட குழுவினரால் விசேட மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டார்.