இரு தரப்பினரும் ஒன்றிணைந்தே செயற்பட வேண்டும் - பசில்

Published By: Daya

27 Aug, 2019 | 03:49 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொள்கைகளை பாதுகாக்க வேண்டிய தேவை  பொதுஜன பெரமுனவிற்கு உண்டு . சுதந்திர கட்சியின் ஊடாகவே  பொதுஜன பெரமுன தோற்றம் பெற்றது.  தற்போது  அதற்கான வேலைத்திட்டங்களே முன்னெடுக்கப்படுகின்றது. இரு தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நிலையான மற்றும் பலமான ஒரு அரசாங்கத்தினை தோற்றுவிக்கலாம் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பரந்துப்பட்ட கூட்டணி அமைத்தல் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை இன்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது. பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதன் பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

உத்தேச ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும், பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற நோக்கிலே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது. நிறைவுப் பெற்றுள்ள ஆறு இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில்   கொள்கை திட்டங்கள் ஒருமித்து உருவாக்கப்பட்டுள்ளன. அத்திட்டங்கள் எதிர்வரும் நாட்களில் உத்தியோகப்பூர்வாக அறிவிக்கப்படும்.

பொதுஜன பெரமுனவுடன்  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஒன்றிணைந்தால் சுதந்திர கட்சியின்  கொள்கைகள் மறக்கடிக்கப்பட்டு கட்சி பலவீனமடையும் என்று ஒரு தரப்பினர்  தவறான  கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். வரலாற்று பாரம்பரிய பின்னணியை கொண்ட சுதந்திர கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கம்  பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08