ஹட்டன் மேபீல்ட் தோட்டத்தில் தனியார் பஸ் வண்டியொன்று விபத்திற்குள்ளானதில் சாரதி உட்பட 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் சேவையிலீடுபடும் தனியார்  பஸ்வண்டியே வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்து இடம்பெற்று ஒரு மணிநேரமாகியும் அவ்விடத்திற்கு பொலிஸார் எவரும் வரவில்லையெனவும் இவ்வாறு தனியார் பஸ் வண்டிகள் விபத்திற்குள்ளாவது வழமையானதொன்றாகி விட்டதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.