கங்குலியின் சாதனையை முறியடித்த விராட்!

Published By: Vishnu

27 Aug, 2019 | 12:30 PM
image

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி சவுரத் கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார். 

வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகள் பெற்றதன் மூலம் இவர் அந்த சாதனையை புரிந்துள்ளார்.  

ஆன்டிகுவாவில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி 318 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் வெளிநாட்டு மண்ணில் அதிக வெற்றிகளை தேடிக்கொடுத்த இந்திய அணித் தலைவர் என்ற சாதனையை விராட்கோலி படைத்துள்ளார். 

விராட்கோலி தலைமையில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் 26 டெஸ்டில் விளையாடி 12 இல் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கங்குலி தலைமையில் இந்திய அணி வெளிநாட்டில் 28 டெஸ்டில் விளையாடி 11 இல் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது. 

இந் நிலையிலேயே விராட் கோலி இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

அத்துடன் ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டியில் அதிக வெற்றிகளை பெற்றுத்தந்துள்ள தோனியின் (60 டெஸ்டில் 27 வெற்றி) சாதனையையும் விராட்கோலி (47 டெஸ்டில் 27 வெற்றி) சமன் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35