ரயிலில் மோதுண்டு மரணமான மான் ஒன்றை வெட்டி சாப்பிடுவதற்காக கறி சமைத்துக்கொண்டிருந்த 5 பேரை கைதுசெய்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று தலவாக்கலை, சென்என்லியாஸ் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற ரயிலிலேயே குறித்த மான் மோதுண்டுள்ளது.

குறித்த மானை  தலவாக்கலை சென்என்லியாஸ் தோட்ட தொழிலாளர்கள் ஐந்து பேர் தமது வீட்டிற்கு கொண்டு சென்று கறி சமைப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவலொன்று கிடைத்தது.

இரகசிய தகவலையடுத்து உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்படி மான் இறைச்சி கறியையும் குறித்த ஐவரையும் கைது செய்துள்ளனர் .

மீட்கப்பட்ட மான் இறைச்சியை மிருக வைத்திய அறிக்கையுடன் கைது செய்யப்பட்ட ஐவரையும் நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாக தலவாகலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.