வேலைநிறுத்த போராட்டத்துக்கு தயாராகும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்

Published By: Vishnu

27 Aug, 2019 | 11:55 AM
image

பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கம் மற்றும் நிர்வாக அதிகாரிகள் 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

அதன்படி அவர்கள் நாளையும் நாளை மறுதினமும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இது தொடர்பாக சங்க உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தவும் ஆணையை பெறவும் இன்று பகல் கூட்டம் ஒன்றினை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்துள்ளனர். 

இக் கூட்டத்தில் சகல தொழிற் சங்கங்களினதும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.  

2015 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கமைய வழங்கப்பட்ட கொடுப்பனவு ரூபா 10,000 அரச ஊழியர்களுக்கும் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட்ட போதும், மேலும் 15 சதவீதம் ஊழியர்களுக்கு இன்னும் இவை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படாமல் உள்ளது. 

இந்த முரண்பாட்டினை உடனடியாக நீக்கல், 2016.08.08 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டிற்கமைய வீட்டுக்கடன் வழங்கல், நிதித் தொகையினை அதிகரித்தல், ஆட்சேர்ப்பு முறைமையில் சேவையாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளல், 2013ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட வேறு மொழித்தேர்ச்சிக்கான கொடுக்கப்பட்ட கொடுப்பனவினை மீண்டும் வழங்கல் போன்ற பல கோரிக்கைகள் தொடர்பாக இரு முறை அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53