இரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு

Published By: Digital Desk 4

26 Aug, 2019 | 10:06 PM
image

எம்மில் பலரும் இன்றைய திகதியில் உயர் குருதி அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களது இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது குறித்த முறையான விழிப்புணர்வை பெற்றிருப்பதில்லை.

இரத்த அழுத்தம் மற்றும் உயர் குருதி அழுத்தம் குறித்த விழிப்புணர்வவைப் பெற்றிருந்தால் அதனை எளிதாக கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளலாம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

தினமும் குறிப்பிட்ட நேரத்தில் அல்லது நாளாந்தம் தலைவலி ஏற்படுவது, மூக்கிலிருந்து இரத்த கசிவு, மூச்சு திணறல் அல்லது மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை அண்மையில் திடீரென்று ஏற்பட்டிருந்தால் அவை உயர் குருதி அழுத்தப் பாதிப்பிற்கான அறிகுறிகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

 ஏனெனில் இத்தகைய தருணங்களில் இதயம் வழமையை விட கூடுதலான பணியை மேற்கொள்கிறது. உடல் முழுவதும் இரத்தம் செலுத்தும் பணியை இயல்பான அளவைவிட அதிக அளவில் இதயம் மேற்கொள்வதால், உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்தம் சீராக செல்வதில்லை. குறிப்பாக நுரையீரலுக்கு இரத்தம் வருவதில் தடை அல்லது குறைபாடு இருந்தால், இதனால் ஒக்சிஜன் கிடைப்பதில்சீரற்றத்தன்மை உண்டாகிறது. 

இதனால் உயர் குருதி அழுத்த பாதிப்பு அதிகரிக்கிறது. அத்துடன் தொடர்ந்து மூளைக்கு தேவையான ஒக்சிஜன் கிடைப்பதில் தட்டுப்பாடு அல்லது இடையூறு ஏற்படுகிறது.  இதன் காரணமாக சிலருக்கு அதிக சோர்வு, பார்வைத்திறன் மாறுபாடு போன்றவைகூட ஏற்படலாம். இவையும் உயர் குருதி அழுத்த பாதிப்பின் அறிகுறி என்பதால் உடனடியாக சிகிச்சைப் பெறவேண்டும். 

அண்மைய ஆய்வின் படி இரத்த அழுத்த பாதிப்பு மற்றும் உயர்குருதி இரத்த அழுத்த பாதிப்பு குறித்து 45 சதவீதத்தினருக்கு மேல் உரிய விழிப்புணர்வு இல்லை என்றும், விழிப்புணர்வு பெற்றவர்களில் 10 சதவீதத்தினர் முறையான சிகிச்சை பெற்று, இரத்த அழுத்தத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது. 

தற்போது இரத்த அழுத்தத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கான கருவியை வீட்டிலேயே வைத்திருக்கிறார்கள். குறிப்பாக கருத் தரித்திருக்கும் பெண்கள் தங்களின் இரத்த அழுத்தம் குறித்த பரிசோதனையை முறையாக மேற்கொள்வதற்காக இந்த கருவியை வீட்டிலேயே வைத்துக் கொண்டு பயன்படுத்துகிறார்கள். 

இரத்த அழுத்த பாதிப்பை கட்டுப்படுத்தாவிட்டால் மாரடைப்பு, பக்கவாதம் ,சிறுநீரகம் செயலிழப்பு போன்றவை ஏற்படும். இதனால் சர்க்கரை நோய்க்கு நோய்க்குரிய விழிப்புணர்வைப் போல் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதிலும் விழிப்புணர்வு தேவை.

டொக்டர் உமையாள் முருகேசன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04