கிம் யொங் உன்'னின் மேற்­பார்­வையின் கீழ் ஏவுகணைப் பரிசோதனை: அப்படியென்ன சிறப்பம்சம் தெரியுமா..?

Published By: J.G.Stephan

26 Aug, 2019 | 03:03 PM
image

வடகொரிய தலைவர் கிம் யொங் உன் னின் மேற்­பார்­வையின் கீழ் ஒரே சம­யத்தில் பல ஏவு­க­ணை­களை ஏவக்­கூ­டிய ஏவு­கணை ஏவும் முறைமை மூலம் ஏவு­க­ணைகள் ஏவிப் பரி­சோ­திக்­கப்­பட்­ட­தாக வடகொரிய அர­சாங்க ஊட­க­மான கே.சி.என்.ஏ. நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை அறிக்­கை­யிட்­டுள்­ளது.

 மேற்­படி ஏவு­கணைப் பரி­சோ­த­னை­யா­னது அணு ஆயுதக் களைவு தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு ஒரு சவா­லாக அமை­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதன்­போது இரு குறுந்­தூர ஏவு­க­ணைகள் கட­லுக்குள் ஏவிப் பரி­சோ­திக்­கப்­ப­ட்­ட­தாக தோன்­று­வ­தாக தென்­கொ­ரிய இரா­ணுவம் கூறு­கி­றது.

அமெ­ரிக்­கா­வாலும் தென்கொரி­யாவாலும் இணைந்து மேற்­கொள்­ளப்­பட்ட இரா­ணு வப் பயிற்­சி­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­விக்கும் வகை­யி­லேயே  இந்த ஏவு­க­ணை­களை ஏவிப் பரி­சோ­திக்கும் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. தற்­போது தனது நாட்டால் உரு­வாக்கிப் பரி­சோ­திக்­கப்­பட்ட  முறை­மை­யா­னது மாபெரும் ஆயு­த­மொன்­றா­க­வுள்­ள­தாக கூறிய கிம் யொங் உன், அதனை உரு­வாக்­கிய விஞ்ஞா­னி­க­ளுக்கு பாராட்­டு­க்களைத் தெரிவித்­துள்­ள­தாக வடகொரி­யாவின் உத்­தி­யோ­க­பூர்வ  செய்தி முகவர் நிலை­ய­மான கே.சி. என்.ஏ குறிப்­பிட்­டுள்­ளது.

 இத்­துடன் நாடு எதிர்­கொண்­டுள்ள இரா­ணுவ ரீதி­யான அச்­சு­றுத்­தல்கள் மற்றும்  அழுத்தம் என்­ப­னவற்றை முறி­ய­டிக்கக் கூடிய வகையில் ஆயு­தங்­களை விருத்தி செய்­வது நாட்­டிற்குத் தேவை­யா­க­வுள்­ள­தாக கிம் யொங் உன் இதன்­போது தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில் மேற்­படி ஏவுகணை ஏவும் நடவடிக்கையை கிம் யொங் உன் மேற் பார்வை செய்வதை வெளிப்படுத்தும் புகைப்படங்கள்  வடகொரிய உத்தியோக பூர்வ ரொடொங் சின்மன்  பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26