தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கை நாளை மாலை 6 மணியுடன் நிறைவுக்கு வருகின்றது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக எதிர்வரும் 16 ஆம்  திகதி சட்டமன்ற தேர்தல் இடம்பெறுகின்றது.

தமிழகம் முழுவதும் 66 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளது.

வாக்குப்பதிவுக்கு தேவையான சுமார் ஒரு இலட்சத்து 5 ஆயிரம் மின்னணு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், அவர்களின் புகைப்படம், சின்னம் பொறிக்கும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

நாளைமறுதினம் 15 ஆம் திகதி பாதுகாப்புடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள்எடுத்துச் செல்லப்படவுள்ளன.

தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களும் நாளை மாலை 6 மணியுடன்  நிறுத்திக்கொள்ள வேண்டும்.

14 ஆம் திகதிமாலை 6 மணியிலிருந்து 16 ஆம் திகதி மாலை 6 மணி வரை தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிடவும் தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.

தேர்தலுக்கு 2 நாட்களே உள்ளதால், அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யவாய்ப்பு அதிகம் உள்ளதால், தேர்தல்ஆணையம் சார்பில் தமிழகம் முழுவதும் 7,500 பறக்கும் படைகள் அமைத்து கண்காணிப்பு பணியைதீவிரப்படுத்தியுள்ளது.

சுமார் 500 வெளிமாநில பார்வையாளர்களை இரவு முழுவதும் ரோந்துப்பணியில் நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.