இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்கைகள் தொடரும்: ருவன் குண­சே­கர

Published By: J.G.Stephan

25 Aug, 2019 | 09:57 AM
image

செ.தேன்­மொழி

அவ­ச­ர­கால சட்­டத்தை நீக்­கி­னாலும் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தாக்­கு­தல்கள் தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் விசா­ர­ணை­க­ளுக்கும், கைது நட­வ­டிக்­கை­க­ளுக்கும், தற்­போது பயங்­க­ர­வாத பிரி­வி­னரால் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சந்­தேக நபர்­களின் விளக்­க­ம­றி­ய­லுக்கும் மற்றும் அவர்­களின் சொத்­து­களை தடை­செய்­வ­தற்கும்  எந்­த­வி­த­மான பாதிப்­பையும் ஏற்­ப­டுத்­தாது என பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

ஊட­க­மொன்றில் வெளி­யா­கி­யி­ருந்த செய்தி தொடர்பில் அவ­தானம் செலுத்­திய பொலிஸ் தலை­மை­யகம்,  இந்த செய்தி தொடர்பில் பொது­மக்­க­ளுக்கு தெளி­வினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே இவ்­வாறு அறி­வித்­தலை மேற்­கொள்­வ­தா­கவும்  பொலிஸ் அத்­தி­யட்­சகர் மேலும் தெரி­வித்தார்.

தொடர்ந்து அவர் கூறு­கையில், பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களின் பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை போதிக்கும் மூன்று அமைப்­புகள் நாட்டில் தடை­செய்­யப்­பட்­டுள்­ளன. அதன்­படி தேசிய தௌஹீத் ஜமாஅத் , ஜமா­அத்தே மில்­லாது இப்­ராஹிம் மற்றும் விலயா அஸ் செய்­லானி எனப்­படும் மூன்று அடிப்­ப­டை­வாத அமைப்­புகள் இவ்­வாறு தடை செய்­யப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் அவ­சர காலச் சட்­டத்தை நீக்­கு­வ­தனால் இவற்­றுக்கு விதிக்­கப்­பட்­டுள்ள தடையும் நீக்­கப்­படும் என்­பது தவ­றா­ன­தாகும்.

இந்த அமைப்­புகள் கடந்த மே மாதம் 13 ஆம் திகதி தடை­செய்­யப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டன. அதற்­க­மைய 22233 இலக்க விசேட வர்த்­த­மானி அறி­வித்­தலில் இந்த தடை­தொ­டர்பில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இதன்­போது 1979 ஆம் ஆண்டு 48ஆம் இலக்க சட்ட கோவைக்­க­மை­யவே இந்த அமைப்­புகள் தடை­செய்­யப்­ப­டு­வ­தாக வர்த்­த­மா­னியில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. 

இந்­நி­லையில் அவ­ச­ர­கால சட்­டத்தை நீக்­கு­வ­தா­னாலும் இந்த அமைப்­பு­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டுள்ள தடை ஒரு­போதும் நீக்­கப்­ப­டாது.

அதே­வேளை பயங்­க­ர­வாத தாக்­கு­தலின் பின்னர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள 200 பேரும் , அவ­ச­ர­கால சட்­டத்தை நீக்­கு­வ­தனால் விடு­தலை செய்­யப்­ப­டு­வ­தாக குறிப்­பிட்­டி­ருப்­பதும் சாத்­தி­ய­மற்­றது. இவர்கள் அனை­வரும் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழே கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்­களின் விசா­ர­ணைகள் முடிவுரும் வரை எந்த சந்தேக நபர்களும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். மற்றும் இந்த தாக்குதல்கள் தொடர்பில் மேலும் சந்தேக நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர். இந்த விசாரணை செயற்பாடுகளுக்கு அவசரகால சட்டம் நீக்கம் எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56