இலங்கை கரையோர பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு

Published By: Daya

24 Aug, 2019 | 06:05 PM
image

(ஆர்.விதுஷா)

 அவசரகாலச்சட்டம்  நீக்கப்பட்டதையடுத்து  கரையோரப்பகுதியின்  பாதுகாப்பு  விசேட  விதமாகப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் , ரோந்து நடவடிக்கைகளில்  கடற்படையினர்  ஈடுபட்டுள்ளதாகவும்  கடற்படை  ஊடகப்பேச்சாளர்  லெப்டினன் கொமாண்டர்  இசுறு  சூரிய  பண்டார  தெரிவித்தார்.  

 மேலும்  ,   பயங்கரவாதிகள்  நாட்டிற்குள் வருவதனையும்  ,  வெளியே  தப்பித்துச்  செல்லவும்  தடுக்கும்  வகையில்  கண்காணிப்பு  நடவடிக்கைகளை  கடற்படை  தீவிரப்படுத்தியுள்ளதாகவும்  அவர்  குறிப்பிட்டார்.  

பாகிஸ்தானியப்  பயங்கரவாத  அமைப்பான  லஷ்கர்-இ-தொய்பாவின் ஆறு  உறுப்பினர்கள்  இலங்கையிலிருந்து    தமிழகத்திற்குள்  ஊடுருவியுள்ளதாக  இந்திய  மத்திய  உளவுத்துறை  எச்சரித்துள்ளதாக  இந்திய  ஊடகங்கள்  செய்தி  வெளியிட்டுள்ளன. 

6  பயங்கரவாதிகளும் கோவையில் தங்கியுள்ளதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.  அதனையடுத்து   தமிழகத்தின்  கோவை உட்பட பல மாவட்டங்களில் பெரும் பதற்றம் நில ஏற்பட்டுள்ளது. இது  தொடர்பில்  வினவியபோதே   கடற்படை ஊடகப்பேச்சாளர்  மேற்கண்டவாறு  தெரிவித்தார்.  

அவர்  மேலும் கூறியதாவது  ,  

இலங்கையிலிருந்து பயங்கரவாதிகள்  கடல் மார்க்கமாகத் தப்பித்துச் செல்வதற்கு எத்தகைய வாய்ப்பு இல்லை.  ஏனெனில் கடலோரத்தின் பாதுகாப்பு  முன்னரை விடவும்  ஏப்ரல் 21  குண்டுத்தாக்குதலின் பின்னராகப் பலப்படுத்தப்பட்டுள்ளது.  

கடற்படையினர்  எந்நேரத்திலும்  ரோந்து நடவடிக்கைகளில்  ஈடுபட்டு வருவதுடன்,  கண்காணிப்பு  நடவடிக்கைகளையும்  மேற்கொண்டு வருகின்றோம். இவ்வாறானதொரு நிலையில் கடல்  மார்க்கமாகத்  தப்பித்துச்  செல்வதற்கு  எந்த  வாய்ப்புக் களும்  இல்லை. பயங்கரவாதிகள் இந்தியாவினுள்  நுழைந்துள்ளமை  தொடர்பில் எத்தகைய  உத்தியோகப்பூர்வ தகவலும் எமது உளவுத்துறையினருக்குக்  கிடைக்கப்பெற்றதாகத் தெரியவில்லை. 

இராணுவ  ஊடகப்பேச்சாளர் 

புலனாய்வு  தகவல்களுக்கு  அமைய  அவ்வாறாக  இலங்கையிலிருந்து பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள்  ஊடுருவி யுள்ளமை தொடர்பிலான தகவலை ஏற்றுக்கொள்ள முடியாது.  இவ்வாறாக  இந்தியாவிற்குள்  பயங்கரவாதிகள்  ஊடுருவி யுள்ளமை  தொடர்பில் உத்தியோகப்பூர்வ  தகவல்கள் எவையும் எமக்கு  இது  வரையில்  கிடைக்கப்பெறவில்லை  என்று  இராணுவ  ஊடகப்பேச்சாளர்  பிரகேடியர்  சுமித் அத்தபத்து  தெரிவித்தார். 

பொலிஸ்  ஊடகப்பேச்சாளர் 

பொலிஸாரிடம் வினவியபோது, அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளமை  தீவிரவாத செயற்பாடுகளுடன்  தொடர்புடைய  சோதனை,  கைது,  தடுத்து வைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தாது.    

மேலும்  , தொடர்ந்தும் பாதுகாப்பு  கடமைகளை  பலப்படுத்தியுள்ளதாகவும்,  பயங்கரவாத நடவடிக்கைகளில்  ஈடுபடுவோர்  மற்றும்  அதனுடன்  தொடர்புடையோரை கைது செய்யும்  நடவடிக்கைகள்  தொடர்ந்தும் இடம்பெறும்  என  பொலிஸ்  ஊடகப்பேச்சாளர்  பொலிஸ்  அத்தியச்சர்  ருவாண்  குணசேகர  தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33