விண்வெளியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலாவது மோசடி - நாசா விசாரணை

Published By: Rajeeban

24 Aug, 2019 | 03:47 PM
image

விண்வெளியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலாவது மோசடி குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து  பெண் ஓரினச்சேர்க்கையாளரான விண்வெளிவீராங்கனையொருவர்  ஒருவர் தனது முன்னாள் துணைவியின் வங்கிக்கணக்கில் மோசடிபுரிந்துள்ளார் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

ஆன் மக்கிலெய்ன்  என்ற விண்வெளி வீராங்கனை  மீதே இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

அவரது முன்னாள் துணைவி  சம்மர் வோர்டன் என்பவா இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து  தனது முன்னாள் துணைவியின்  வங்கிகணக்கை கையாண்டதை ஏற்றுக்கொண்டுள்ள ஆன் மக்கெய்ன்   எனினும் தான் மோசடி செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

எனது முன்னாள் துணைவியிடம்  போதிய பணம் உள்ளதா என்பது குறித்து அறிவதற்காக நான் அவரது கணக்கை கையாண்டேன் என ஆன் மக்கெய்ன் தெரிவித்துள்ளார்.

ஆன்மக்கெய்ன் தான் குற்றச்செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுவதை முற்றாக மறுக்கின்றார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

மக்கெய்ன் அமெரிக்காவின் விமானப்படையை சேர்ந்த புலனாய்வு உத்தியோகத்தரான வோர்டனை 2014 இல் திருமணம் செய்து 2018 இல் விவகாரத்து செய்துள்ளார்.

நாசாவின் விசாரணையாளர்கள் இருவரையும் தொடர்புகொண்டுள்ளனர்.

ஆன் மக்கிலெய்ன் அமெரிக்காவின் போர்விமானியாக பணியாற்றியவர்.ஈராக்கில் நடவடிக்கையில் ஈடுபட்டவர் பின்னர் 201 இல் நாசாவினால் விண்வெளிக்கு செல்வதற்காக தெரிவு செய்யப்பட்டார்.

இவர் சர்வதேச விண்வெளி கலத்தில் ஆறுமாதங்கள் தங்கியிருந்தார்.

இதேவேளை இந்த விவகாரத்தை தொடர்ந்து  ஆன்மக்கிலெய்ன் ஒரு பெண் ஓரினச்சேர்க்கையாளர் என்பதும் பகிரங்கமாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52