காணாமல் போனோர் அலுவலகத்தை யாருக்காக திறந்தீர்கள்; உறவுகள் போர் கொடி?

Published By: Daya

24 Aug, 2019 | 03:29 PM
image

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் யாருக்காக யாரின் ஒத்துழைப்புடன் திறந்தீர்கள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வவுனியா சங்கம் கேள்வி எழுப்பியுள்ளதுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி எதிர்வரும் 30 ஆம் திகதி ஓமந்தையில் பாரிய போராட்டத்தினையும் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இன்று வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு கேள்வியெழுப்பியிருந்தனர்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்கள்,

சர்வதேசத்திற்கான கண்துடைப்பாக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதே தவிர மக்களின் தேவைக்காக இது திறக்கப்படவில்லை. நாம் குறித்த அலுவலகத்தினை எதிர்த்து போராடிய போதிலும் நீங்கள் யாருடைய அனுமதியும் இன்றி திறந்துள்ளீர்கள். இது காணாமல் ஆக்கப்பட்டோருக்காக திறக்கப்பட்டதா? அல்லது வேறு யாருக்காகவும் திறக்கப்பட்டதா?

பட்டப்பகலில் திறக்க வேண்டிய அலுவலகத்தினை அதிகாலையில் திறக்கவேண்டிய தேவை என்ன?. எங்கள் உறவுகளுக்கு நீதியைத்தேடி தரப்போகின்றீர்களா இல்லாவிட்டால் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இதனை திறந்தீர்களா என காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரை பார்த்து கேட்கின்றோம்.

நாங்கள் நீதிக்காகவே போராடுகின்றோம். பணத்திற்காகவோ சுகபோகத்திற்காகவோ போராடவில்லை. எமக்கும் வீடு இருக்கின்றது. பிள்ளைகள் இருக்கின்றது. எனினும் நாம் வீதியோரங்களில் போராடுவது எமது உறவுகளுக்காகவே. எமது போராட்டத்தினை மிகவும் கொச்சைப்படுத்தாதீர்கள்.

இந்நிலையிலேயே நாம் எதிர்வரும் 30 ஆம் திகதி பாரியளவிலான போராட்டமொன்றினை முன்னெடுக்கின்றோம்.

வவுனியா பன்றிக்கெய்த குளத்தில் இருந்து எமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்த ஓமந்தை சோதனைச்சாவடி இருந்த இடம்வரையும் பேரணியாக செல்லவுள்ளோம்.

இதற்கு அரசியல் கட்சி பேதமின்றி அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். அத்துடன் பொது அமைப்பினர், மாணவர்கள், இளைஞர்கள் கலந்துகொண்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதிகோரிய போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24