அமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்

Published By: Digital Desk 3

24 Aug, 2019 | 12:55 PM
image

புவி வெப்பமடைதலை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும் அமேசன் மழை காடுகளில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு அதிக முறை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்

சர்வதேச தலைவர்கள், பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள்,  அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ குறித்து  கவலை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் பிரான்சில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் அமேசன் காட்டுத்தீ குறித்து விவாதிக்க அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் சர்வதேச தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிரேசில் அதிபர் போல்சோனரோ பொய்யான தகவல்களைத் தருவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் சுற்றுச்சூழல் பிரச்சினையை பிரேசில் அதிபர் போல்சோனரோ பெரிதுப்படுத்தவில்லை என்றும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. 

இம்மானுவேல் மெக்ரானின் இந்த கருத்துக்கு பிரேசில் அதிபர் போல்சனாரோ, அமேசன் காட்டுத்தீ பிரச்சினையில் உலக நாடுகள் தலையிட வேண்டாம் என காட்டமாக பதில் அளித்துள்ளார்.  பிரேசில் அதிபர்  தீயை அணைக்க இராணுவத்தை அனுப்ப உத்தரவிட்டு உள்ளார். ஐரோப்பிய தலைவர்களின் கடுமையான அழுத்தத்திற்கு பிறகே இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அமேசன் காட்டுத்தீயை அணைக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கடந்த 15 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அமேசன் படுகை முழுவதும் ஏற்பட்ட ஒட்டுமொத்த தீ ஆனது 15 ஆண்டுகளின் சராசரிக்கு அருகில் உள்ளது என்று கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21
news-image

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல்...

2024-03-16 16:18:24
news-image

திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை: தூத்துக்குடியில்...

2024-03-16 12:37:34