யார் ஜனாதிபதியானாலும் ஐ.நாவிற்குப் பொறுப்புக்கூற வேண்டும் ; செல்வம் அடைக்கலநாதன்

Published By: R. Kalaichelvan

24 Aug, 2019 | 11:40 AM
image

(நா.தனுஜா)

நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும், யார் ஜனாதிபதியாக வந்தாலும் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்குப் பொறுப்புக்கூறும் நிலையிலேயே இருப்பார்கள்.

 ஜனாதிபதி மாறினாலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் மாறாது.அந்தத் தீர்மானங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும்வரை அரசாங்கத்தின் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் அழுத்தங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

காணிவிடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளமை, காணாமல்போனோர் அலுவலகத்தின் செயற்பாடு உள்ளிட்ட விடயங்கள் குறித்து வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:

ஜனாதிபதி எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கிற்கு விஜயம் செய்வதற்கு முன்னர் படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுதியான அறிவிப்பினை விடுக்க வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தியிருக்கின்றோம். 

நிறைவேற்றதிகாரம் உடைய ஜனாதிபதி மற்றும் முப்படைகளின் பிரதானி என்ற வகையில் உண்மையில் நினைத்தால் காணிகள் அனைத்தையும் விடுவிக்கச் செய்ய முடியும். 

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் காணிகளை விடுவிப்பதற்கான உத்தரவை ஜனாதிபதி வழங்கவேண்டும் என்று அவரிடம் வலியுறுத்துவது எம்முடைய கடமை. நாங்கள் அதனைச் செய்திருக்கின்றோம். எனினும் இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பது ஜனாதிபதியின் கைகளிலேயே இருக்கின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10