தமிழ் கலை புறக்கணிப்பா....

Published By: Digital Desk 3

24 Aug, 2019 | 11:37 AM
image

சினிமா என்­பது  மனித வாழ்­வி­ய­லோடு ஒன்­றித்துக் கிடக்கும் மிகப்­பெ­ரிய ஊட­க­மாகும்.  என்னைக் கேட்டால் சினிமா என்­பது வெறு­மனே பொழு­து­போக்கு சாதனம் மட்டும் அல்ல நவீன கால­ மாற்­றத்தில்  நமது கலை கலா­சார விழு­மி­யங்­க­ளையும் வாழ்­வி­ய­லையும் பதிவு  செய்து   தலை­மு­றைகள் தாண்­டி ­பா­து­ காக்­கப்­போ­வது சினிமா  மட்­டும்தான் என்று கூறுவேன். ஏனெனில் ஆயிரம் ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முன்னர் வாழ்ந்த  மன்­னர்­களின் பெரு­மை­யையும் மகான்­களின் பெரு­மை­யையும்  எம் கண்­ முன்னே கர்­ண­ணாக, ராஜ­ரா­ஜ­ சோ­ழ­னாக,  வீர­பாண்­டிய கட்ட பொம்­ம­னாக, பாகு­ப­லி­யாக  கொண்டு வந்து நிறுத்­தி­யது சினி­மா தான். இன்று அதி­காரம், பணம், அர­சியல் உள்­ளிட்ட பல்­வேறு சாக்­க­டை­க­ளிடம் சிக்கி சாமா­னியன் படும் துய­ரங்­களை  வெளிச்சம் போட்டுக் காட்­டு­வதும் சினி­மாதான். ஓர்­இனத்தின் இருப்பை விளக்கும் கலை­யான சினிமா அழி­யாத கல்­வெட்டு போன்­றதே.

அந்­த­வ­கையில் தென்­னிந்­திய  சினிமா அதா வது நம் தமிழ் சினிமா என்­பது  நல்ல சிறந்த  படைப்­புகள் மூலம்  நமது  கலை கலா­சார விழு­மி­யங்­களைப் பாது­காத்து  தலை­மு­றை­க­ளுக்கு வழங்கும்  பொக்­கி­ஷங்­க­ளாக  உள்­ளது. அது­மட்டும் அல்ல பல்­வேறு சமூகச் சீர்கேடு­களை  சுட்­டிக்­காட்டி தட்­டிக்­கேட்கும் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தும் சாத­ன­மா­கவும் உள்­ளது.  இத­னால்தான் தமி­ழகம், இந்­தியா தாண்டி சர்­வ­தேச திரை­ வி­ழாக்­க­ளிலும் தமிழ் சினி­மாக்­க­ளுக்கு பல்­வேறு அங்­கீ­கா­ரங்கள் கிடைத்­துக்­கொண்­டி­ருக்­கி­ன்றன.ஆனால் இம்­முறை இந்­திய அர­சினால் வழங்­கப்­படும் தேசிய விரு­து களில் தமிழ் சினிமா புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளமை பல்­வேறு விமர்­ச­னங்­களை  எழுப்­பி­யுள்­ளது. 

ஒவ்­வொரு வரு­டமும் பல்­வேறு விரு­து­களை வாங்கிக் குவிக்கும் தமிழ் சினி­மா­வுக்கு இம்­முறை கிடைக்க வேண்டிய ஒரு தேசிய விருது கூட கிடைக்கவில்லை. சிறந்த மாநில படங்­களில் மட்டும்  தமி­ழுக்­கான படத்தில் பாரம் என்­றொரு சுயா­தீன படத்துக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இது சர்ச்­சை­க­ளையும் கலை­ஞர்­க­ளி­டையே வேத­னை­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

 தமிழில் கடந்த வருடம் 200க்கு மேற்­பட்ட திரைப்­ப­டங்கள் வெளியா­கின. கடந்த இரண்­டாண்­டு­களில் தமிழ்த் திரை­யு­லகம் மாற்று சினிமா நோக்­கிய பய­ணத்தை மிகத் தீவி­ர­மா­கவே மேற்­கொண்­டி­ருக்­கி­றது.  `லென்ஸ்', `தர­மணி', `96', `பேரன்பு', `பரி­யேறும் பெருமாள்', 'கனா', `2.0', `வட­சென்னை', 'சூப்பர் டீலக்ஸ்'  என சர்­வ­தேசத் தரத்தில் பல திரைப்­ப­டங்கள் தமிழில் வெளி­யா­கி­யி­ருந்­தன. இந்தப் படங்கள் எல்லாம், பல பன்­னாட்டுத் திரைப்­படத் திரு­

வி­ழாக்­களில் பல அங்­கீ­கா­ரங்­க­ளையும், விரு­து­க­ளையும் பெற்­றன. இன்­னமும் பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால் விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களுக்கு கூட தேசிய விருதுகள் கிடைக்கப்பெறாமை தமிழ் சினிமா ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது. 

வாழ்­வி­யலைப் பட­மாக்­கு­வதில் தமிழ், மலை­யாளம், பெங்­காலி மொழித் திரைப்­ப­டங்கள் இந்­தி­யா­வி­லேயே முன்­னோ­டிகள் எனலாம். இந்த ஆண்டு, இந்த மூன்று மொழி­களும் சேர்த்தே ஏழு விரு­து­கள்தான் பெற்­றுள்­ளன. அதிலும் மூன்று விரு­துகள் அந்­தந்த மொழி­களில் வந்த சிறந்த படங்­க­ளுக்கு கொடுக்­கப்­படும் விரு­துகள். பொதுப்­பி­ரி­வு­களில் பெங்­காலி மற்றும் மலை­யாள மொழிப்­ப­டங்கள் தலா இரண்டு விரு­துகள் மட்­டுமே பெற்­றுள்­ளன.  தமி­ழுக்கு இந்தப் பிரி­வு­களில் ஒரு விரு­து­கூட வழங்­கப்­ப­ட­வில்லை. 

விருதுகள் வழங்கும் தேர்­வுக்­கு­ழுவில்  எல்லா மொழி­களி­ல் இருந்தும் ஒரு பிர­திநி­தித்­துவம் இருக்­க ­வேண்டும் என்பது  அடிப்­படை விதி. ஆனால் தமிழக இயக்­கு­நர்­க­ளுக்கு  அங்கு சென்று தங்­க­ளது நேரத்தைச் செல­விட மனம் இல்லை. யாரும் செல்­வ­தில்லை.   என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஆயினும் இயக்குநர்கள் பாலு­ம­கேந்­திரா,  பார­தி­ராஜா  உள்ளிட்டோர் அக்குழுவில் இருந்த போது விவாதம்  செய்தும் சண்டையிட்டும் தமி­ழுக்குக் கிடைக்­க ­வேண்­டிய அங்­கீ­காரத்தை பெற்றுக்கொடுத்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்­நி­லையில் தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இயக்­குநர் இமயம் பார­தி­ராஜா கூறு­கையில், "தமிழ்ப் பட உலகில் தர­மான இயக்­கு­னர்கள் அதிகம் வந்­துள்­ளனர். தர­மான படங்­களும் நிறைய வந்­துள்­ளன. நமக்­குள்ள சூழ்­நிலை சரி­யில்லை. யார் யாரோ உட்­கார்ந்து அவர்­க­ளுக்கு வேண்­டி­ய­வர்­களை அனுப்­பு­கின்­றனர்.  தமிழில்  தர­மான படங்களுக்கு  விருது இல்லை. எங்­க­ளுக்கு ஓர் அங்­கீ­காரம் வேண்டும்" என்றார்.

 இதேவேளை இயக்குநர் ராமின் பேரன்பு திரைப்படத்துக்காக  மம்முட்டிக்கு தேசிய விருது கிடைக்கும் என்று அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் விருதுகள் பட்டியலில் கூட அவரது பெயர் இல்லை. இதனால்  ரசிகர்கள் தேர்வுக்குழுவினரோடு டுவிட்டரில் மோதியதும் மம்முட்டி ரசிகர்களுக்காக மன்னிப்புக் கேட்டதும் நடந் தேறியுள்ளது. 

இப்படி தமிழனின் கலைப் படைப்புகள் புறக்கணிக்கப்படுவது ஏன்? தமிழ் சினி­மாவில் திறமை மிக்க கலை­ஞர்கள் இல்­லையா.... அல்­லது அர­சியல் கார­ண­மாக  அவர்­களை அங்­கீ­க­ரிக்க  மத்திய  அர­சுக்கு மனம் இல்­லையா என்ற கேள்வி எழு­கின்­றது. நல்ல திரைப்­படம் ஒன்று புறக்­க­ணிக்­கப்­பட்­டி­ருந்தால்  கூட ஏதா­வது காரணம் இருக்கும் என்று கூறலாம்.  ஆனால் ஒட்­டு­மொத்­த­மாக  விருதுகள் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட எல்லாத் திரைப்­ப­டங்­களும் புறக்­க­ணிக்­க­ப­டு­கின்­றன என்றால் இதில் அர­சியல் தவிர்ந்து வேறு கார­ணங்கள் இருக்­குமா என்­பது  கேள்விக்குறியே.  ஏனெனில் தமி­ழ­கத்தின் முன்னால் முதல்­வர்­க­ளான கரு­ணா­நிதி, ஜெய­ல­லிதா ஆகி­யோரின் மறை­வின் பின்னர் மத்­தியில் ஒலித்து ஓங்கும் தமி­ழக அர­சியல் தலைமையின்  குரல் இல்லை. நீட் தேர்வு,  விவ­சாய நிலங்­களை  அழிக்கும் 8 வழி சாலை திட்டம், ஹைட்ரோ காபன் திட்­டங்கள், காவிரி நதிநீர் பிரச்­சினை என அனைத்து வகை­யிலும் தமி­ழ­கத்­துக்கு எதி­ரான திட்­டங்கள் தடை­யின்றி நடத்தப்படு­வ­தோடு தமிழ், தமி­ழகம் மத்­தியில் புறக்­க­ணிக்­கப்­ப­டு­கின்ற நிகழ்­வுகள் தொடர்ந்து  நடை­பெ­று­கின்­றன. தமி­ழனின் நாக­ரிக தொன்­மையைப் பறைசாற்­றிய கீழடி ஆய்வு கூடம் நிறுத் தப்பட்டு பல போராட்­டங்­களின் பின்­னரே  தொடர்கிறது.  

இந்நிலையில் தேசிய விருது கள் மறுப்புக்குக் காரணம்  பா.ஜ.க. ஆட்­சிக்கு வந்த பிறகு அந்தக் கட்­சிக்குப் பெரி­தாக ஆத­ரவு அளிக்­காத தமிழ், மலை­யாளம் மற்றும் பெங்­காலி மொழி திரைக் ­க­லை­ஞர்­களை வேண்­டு­மென்று புறக்­க­ணிக்­கவே இப்­ப­டிப்­பட்ட சூழல் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என்று கூறப்­ப­டு­கின்­றது. அதிலும் கடந்த ஆண்டு ராம், வெற்­றி­மாறன், பார­தி­ராஜா போன்ற இயக்­கு­நர்கள் உட்­பட தமிழ்த் திரை­யு­லகப் பிர­ப­லங்கள் பலர் தமிழக நலனுக்காக தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதே­போல இந்த ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முன் இந்­தியா முழு­வ­தி­லு­மி­ருந்து பல திரைக்­க­லை­ஞர்கள், `பா.ஜ.க.வைப் புறக்­க­ணிப்போம்’ என வெளிப்­ப­டை­யா­கவே ஒரு முன்­னெ­டுப்பை மேற்­கொண்­டனர். அதிலும் பல தமிழ் இயக்­கு­நர்கள் பங்­கெ­டுத்­தனர். அதன் தாக்­கம்தான் இப்­படி இருக்­கி­றது என்­பது பல திரை ரசி­கர்­களின் கருத்­தாக இருக்­கி­றது. இந்த அர­சி­யலில் எல்லாம் ஈடுபடாதவர் இயக்குநர் ஷங்கர். அவர் எடுத்த படங்கள் பெரும்பாலும் ஒவ்வொரு முறையும் கலை இயக்கம் பிரிவில் விருது வாங்கிவிடும். ஆனால், இந்தியாவின் முதல் நேட்டிவ் 3டி படமான `2.0'க்குக்கூட அந்த ஷங்கரின் வழக்கமான விருது கிடைக்காதது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

எது எப்படியோ தமிழ் சினிமா புறக்கணிப்புக்கு உள்ளாகியுள்ளது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் வெறும் விருதுகள் மட்டும் கலைகளை அங்கீகரிப்பது இல்லை. அங்கீகாரம் என்பது மக்களின் மனதில் அந்தக் கலைப் படைப்பு எந்தளவு உயரத்தில் ஆசனம் இட்டு அமர்ந்துள்ளது என்பதில்தான் இருக்கின்றது. பல்லாயிரம் இதயங்களை வென்ற படைப்புகளின் தரம் நான்கு சுவருக்குள் உள்ள நான்கு பேருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக குறையாது. விருதுகள் தடுக்கப்பட்டாலும்  காலத்தால் அழிக்க முடியாதவைகளாக தமிழனின் சிறந்த கலைப்படைப்புகள்  தலைமுறைகள் தாண்டியும் பேசப்படும் என்பதில் ஐயமில்லை. 

குமார் சுகுணா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37