பஸ் சாரதிகள் பணியில் பழங்குடியின பெண்கள்

Published By: Daya

24 Aug, 2019 | 10:38 AM
image

இந்தியாவில் முதல் முறையாக பழங்குடியின பெண்கள் மகாராஷ்டிர அரச போக்குவரத்து கழக சாரதி பணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பழங்குடியின பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய செய்ய அரசாங்கம் திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. அதில் முக்கிய திட்டம், பழங்குடியின பெண்களுக்கு கனரக வாகனங்களை செலுத்துவதற்கு பயிற்சி வழங்கி, வேலைவாய்ப்பு வழங்குவது ஆகும்.

 

அதன்படி, சமீபத்தில் மகாராஷ்டிர மாநில வீதி போக்குவரத்துக் கழகம், 163 பழங்குடியின பெண்களை தெரிவு செய்துள்ளது. போக்குவரத்து கழகத்தின் இந்த முன்முயற்சியை முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தொடங்கி வைத்தார். 

தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள பெண்களுக்கு உரிய சாரதி பயிற்சி வழங்கப்பட்டு, அதன்பின்னர் அரச பஸ்களை செலுத்தும்  சாரதி  பணியில்  அமர்த்தப்படுவார்கள்.

இந்நிகழ்ச்சியில்  பிரதீபா பாட்டீல் இவ்வாறு தெரிவித்துள்ளார்,

 “பெண் சாரதிகளுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நீண்ட தொலைவுக்கு பெண்  சாரதிகளை அனுப்ப கூடாது. இரவு நேரத்தில் சில இடங்களில் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், தங்குவதற்கு பாதுகாப்பான இடம் வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17