இன்றைய வானிலை!

Published By: Daya

24 Aug, 2019 | 08:53 AM
image

நாட்டின் பல பாகங்களில் இன்றும் காற்றுடன்கூடிய வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இன்றும் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையத்தின் வானிலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் சப்ரகமுவ மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டின் மத்திய, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சில இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க கூடும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடற்படை சமூகமும் அது தொடர்பில் அவதானமாக செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36